காதலில் வெறுப்பேத்தலில் விளைந்த வினை

தன் காதலனை வெறுப்பேத்த எண்ணிய காதலி,
காதலனின் பகைவனோடு நட்பு கொண்டாளாம்.
காதலனை துன்புறுத்தும் எண்ணம் கொண்டாளாம்..
கடைசியில் பெருந்துயரில் ஆழ்ந்து
போனாளாம்..

கஷ்டம்,
காதலுக்கு இஷ்டமென்ற பாடல் வரிகளுக்கேற்றாற்போல்,
நாளும் தன் காதலனுக்கு கஷ்டத்தை இஷ்டப்பட்டு வாரி வழங்கியவள்,
இஷ்டமாய் பெருங்கஷ்டத்தை பரிசாய் பெற்றாளாம்...

என்னவொரு உண்மை!
முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே வருமென்பதே தெளிவு...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Dec-16, 7:53 pm)
பார்வை : 236

மேலே