கள்ளிச்செடியிலும் என் காதலடி

கிறுக்குபிடித்து கிறுக்கியதில்
முள்ளுக்கும் முளைத்திருக்கும்
கள்ளி மேல் காதல்
கள்ளி செடிக்கும் கற்றாழை முள்ளுக்கும்
தெரிந்திருக்கும் என் காதலின் ஆழம்
வலித்ததோ சபித்ததோ
சேரா காதலுக்கா சிதைத்தாயோ
என்னை என சிரிக்குமோ
அவ்வழி செல்கையில்
அதில் நம் பெயரை
அழிக்கச்சொல்லி கேட்குமோ
கண் கவிழ்ந்து கடக்கிறேன்
அழிக்கத்தான் துடிக்கிறேன்