காவியமானவள் - 13

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ... நீண்ட நாட்களுக்கு பிறகு இடையில் நிறுத்திய என் படைப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் சில காரணங்களால் தொடர்ந்து எழுத முடியாமல் போனதற்கு வருந்துகிறேன் நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என எண்ணுகிறேன் ...நன்றி ...

தொடர்ச்சி ...

அறையை அடைந்த ஆனந்த் தனக்கான இருக்கையை தேடி கண்டறிந்து அமர்ந்தான் ஆழ்ந்த தியானத்தில் இரு நிமிடம் மனதை ஒரு முகப்படுத்தி கண் விழிக்க கேள்வித்தாள் மேசையில் ஆசிரியையால் வைக்கப்பட்டிருந்தது ஒற்றை நிமிடம் புறட்டி பார்த்தவாறு இருக்க தேர்வு எழுத துவங்கலாம் என அறிவிப்பு மணி ஒலித்தது...

ஆனந்த் முகம் புன்னகையில் மலர்ந்தது தேர்வும் அவன் எண்ணியவாறு சுலபமாகவே அமைந்திருந்தது,தேர்வு முடிவதற்க்கு அரை மணி நேரத்திற்க்கு முன்னரே எழுதி முடித்து விட்டு ஜன்னலினூடே வெளியில் உற்று நோக்கலானான்...

முழங்கால் உரசும் பின்னலிடா கூந்தலில் மல்லிகை சூடி முழு மதி முகமதில் தேசிய கொடி வண்ணங்களை போல் திருநீறு,மஞ்சல்,சிவப்பென வைத்தும் வைக்காததும் போல சிறு பொட்டுகள் முகத்தை அழகு கூட்டின...
தேவதைகள் வெண்ணிர ஆடை விரும்பி அணிவதுண்டு தாவணிகள் அணியுமா?
அறிவை வினவியது மனது...

அரை மணி நேரம் முடிய ஐந்து நிமிடம் இருந்தது,எச்சரிக்கை மணி ஒலித்தது...
திடுக்கிட்டான் ஆனந்த் சுற்றும் முற்றும் பார்த்தான் விழிகள் விம்மியது தேவதையவள் வந்தது மெய்யல்ல நினைவலைகளே அவளை கண்முன் நிறுத்தியது என அறிந்து கொண்டான்...

விடைத்தாள்களை முடிச்சிட்டு திருப்பிப் பார்த்து கொண்டிருக்க நேரம் கடந்தது விடைத்தாள் வாங்கப்பட்டது விரைவாக அறையில் இருந்து வெளியேறினான்...

தியாட்டரில் இருத்து படம் பார்த்து வெளியேறும் கூட்டம் போல அடாவடிகளாக ஓங்கிய ஒலிகளோடு அனைவரும் வெளியேறினர்...

கதிர்,மணி இருவரும் கூட்டத்தினூடை சக நண்பர்களோடு வெளியே வந்தனர்.ஆனந்த் அவர்களை பார்த்து கையசைத்தான் அவன் கைசைவிற்க்கும் அழைத்த கூக்குறலிற்க்கும் கதிர் மணி இருவரும் வெளியேறி கல்லூரி கேட்டினை அடைய கேள்வித்தாள்கள் தேர்வு முடிந்த மறுகனமே கிழித்தெரியப்பட்டு சிறு சிறு காகிதங்களாக காற்றை கிழித்துக்கொண்டு பறக்க விடப்பட்டன...

ஏன்டா தேர்வு முடிந்த உடனே இப்படி பறக்க விட்டுடிங்களே ஏழுதியதை சரிபார்க்க உதவுமே மாதிரி தேர்வில் தான் இந்த அடாவடிகள் செஞ்சிங்கனா இதுலயும் இப்படி செய்யனுமா என ஆனந்த் அதட்ட,டேய் நீ படிக்ற பய புள்ள உன் அளவுலாம் எங்களால படிக்கவும் முடியாது உன்ன மாதிரி கடமை,கன்னியம்,
கட்டுப்பாடுனெல்லாம் இருக்க முடியாது உன்டோடு அட்வைஸ் உன்னோடு வெச்சுக்க என கேளியாக கதிர் பதிலுறைக்க விடு மச்சி டாப்பர் கூட எல்லாம் நம்க்கு எதுக்கு பேச்சு என மணி கின்டலடிக்க சூடாக தேனீர் ஆர்டர் செய்யப்பட்டு அரட்டைகள் நீண்டது...

நேரம் ஆனது கூட தெரியாமல் பேச்சை பேசியவண்ணம் இருக்க மணி டேய் முடியர மச்சி என வயிற்றை பிடித்துக்கொண்டு அலர இருவரும் துடி துடித்து போயினர் என்ன ஆச்சு மச்சான் ஏன்டா இப்டி அலரர என கேட்க இந்த மொட்ட வெயில்ல டீ வாங்கிகொடுத்து பசிய அடக்க பார்க்கறீங்களேடா,பசி வியிற்றை கிள்ளுகிறது என பதிலுரைக்க வாடா சாப்ட போகலாம் என ஆனந்தும்,கதிரும் தோள் பற்றி உணவு விடுதியை அடைந்தனர்...

வாழை இலையில் நீர் தெளித்து உப்ப,சர்க்கரை வைத்து உணவு பறிமாறும் காலம் மெல்லாம் கனிந்து வெம்மிய காலம் இக்காலம் பஃப்பே சிஸ்டமென கௌரவத்தை நிலை நாட்ட வந்த நாகரீக வளர்ச்சியம் பிச்சைகாரர்கள் கையில் தட்டேந்தி வீடு வீடாக அழைவதை போல் தட்டை ஏந்திக்கொண்டு ஒவ்வொன்றாக வாங்கிச் செல்ல வேண்டும் அவ்வறான முறையே வசதி படைத்தோர் இல்லங்களிலெ கல்யாணத்தில் தொடங்கி காது குற்று வரை அகிலமும் பின்பற்றப்படும் சூழலில் ஆயிரமாயிரம் மாணக்கர்கள் படிக்கும் கல்லூரியில் சொல்லவா வேண்டாம் இதற்க்கு வேலைச் சுமையும் குறையும்,வேலையாட்களையும் முடிந்த அளவு குறைக்கலாம் இதனால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியமும் குறையும் என்ற தொலைநோக்கு பார்வை கல்லூரி நிர்வாகத்திற்க்கு...

அவ்வாறன சூழலில் மாணக்கர்களும் தங்களை பழக்கப்படுத்திக் கொண்டிருந்தனர்...மணி,கதிர்,ஆனந்த் என மூவரும் தனக்கான உனவை வரிசையில் நின்று பெற்றுக் கொண்டு தனக்கான இடத்தை தேர்வு செய்து அமர்ந்தனர்...

📞உணவு விடுதியின் தொலைபேசி மணி ஒலுத்தது...
விடுதி மேற்ப்பார்வையாளர் தொலைபேசியை எடுததுப் பேச எதிர்முனையில் பேசியோர் ஆனந்திடம் பேச வேண்டுமாறும் அவனை தங்கும் விடுதிக்கு அங்கு இருந்தால் அனுப்பி வைக்குமாறும் கூறினர் விடுதி காப்பாளர்...

மேற்பார்வையாளர் ஆனந்த் ஆனந்த் என இருமுறை கூக்குரலிட முன்சென்று என்ன விவரமென கேட்டரிந்தான் முகத்தில் புன்னகை ததும்பியது...

ஒரே எட்டில் வாயிற்படியை தாண்டி குதித்து ஓடலானான்...
நிகழ்வதை பார்த்துக் கொண்டிருந்த கதிர் டேய்!பாத்துப்போடா ஏன் இப்டி தலை தெரிக்க ஓடறான் இவன்
முகத்தில் புன்னகை ததும்ப ஒரே எட்டில் வாயிற்கதவை தாண்டி அதுவும் ஏழு படிகள் கொண்ட வாயிலை தாண்டி ஓடுற அளவு அழைத்தது யார இருக்கும் என மணியிடம் கதிர் கேள்வி எழுப்பினான்...

💃🏻வேற யாரு மச்சி அவன் ஆளாதான் இருக்கும் அதான் தலைதெரிக்க வோடுறான் போல என கேளி செய்தான்...

தலைதெறிக்க ஓடிய ஆனந்த் தங்கும் விடுதியை அடைந்து திரும்ப வரும் அழைப்பிற்க்காக காத்திருந்தான் இருந்தும் மனம்கொள்ளவில்லை ஒரு ஆவல் ஒரு படபடப்பு தவிப்பு என அனைத்தும் ஒட்டிக் கொண்டது...
வாடர்னை வினவினான் யாரென வாடர்ன் தெரியல தம்பி யாரோ ஜென்ஷ் வாய்ஸ் கேட்டது என சொல்லக்கேட்க ஆனந்த் முகம் வாடியது ஓர் வேலை அப்பாவா இருக்குமா இல்ல ஊருல நண்பர்களா இருக்குமா என பலவாறான எண்ண அலைகள் ஓடியது...

மணி ஒலித்தது ஆனந்த் எடுக்க முற்ப்பட்டான்...

அழைத்தது யாராக இருக்கும் தனிமையில் விட்டு வந்த காதல் தலைவியா?
அக்கரை காட்டும் அப்பா தேர்வு குறித்து கேட்டறியவா?
இல்லை எதிர் வீடு அடுத்த வீதியென வயதுக்கு வந்த தெரிவைகளை பட்டியலிட்டு அரட்டை அடிக்க நண்பர்கள் அழைத்தனரா??

ஆவலோடு காத்திருங்கள்...❣
- காவியமாவாள்...

எழுதியவர் : ஜி . கிருபானந்த் (3-Dec-16, 4:30 pm)
சேர்த்தது : கிருபானந்த்
பார்வை : 267

மேலே