இறவா நகரம்

என்னா இருந்தாலும் இந்த உலகத்துல பல மர்மங்கள் நிறைந்திருக்கின்றன என்பது மதனும் அவனுடைய நண்பன் கிஷோரின் எண்ணம் , இந்த சட்டத்திற்குட்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு கண்டுபிடிப்புகளெலாம் தான் தாத்தா பாட்டன் பூட்டனார்கள் கண்டுபிடித்த பழைய கண்டுபிடிப்புகளைதான் புதிய கண்டுபிடிப்புகள் என்ற பெயரில் கண்டுபிடிக்கமுடியும் என்று இருவரும் நிலவியாளர்கள் ஆராய்ச்சியில் சேரும் போதே அறிந்தனர். அதனால் இந்த உலகத்தில் அழிந்த பொருள்கள் எல்லாவற்றுக்கும் ஒரு இருப்பிடம் நிச்சயம் இருக்கவேண்டும் . காகிதம் நெருப்பில் எரிக்கப்பட்டால் அது சாம்பலாக காற்றில் மிதக்கவேண்டும் , அதுபோலவே எதாவது ஒரு கோள் ‘ஸோலார் நெபுலா’ மூலம் வெடித்து சிதறினாலும் அந்த கோளின் பாகங்கள் இந்த வளிமண்டலத்தில் எதாவது ஒரு மூலையில் அடைக்களம் தேடி குடியேரும். அதன் இருப்பிடம் அது . அதுபோலவே இந்த உலகத்தில் அழிந்த பொருள்கள் அனைத்திற்கும் ஒரு இருப்பிடம் நிச்சயம் இருக்கும் .

இந்த எண்ணங்களின் காரணமாக மதனிற்கு தோன்றியதுதான் ‘லெமூரியா’ கண்டத்தின் அழிவும் . அது உண்மையாகவே இருந்ததா ? தமிழர்கள் வாழ்ந்த கண்டமா ? ஒரு காலத்தில் குமரிகண்டமாக இருந்ததா ?. பழந்தமிழர்களின் வரலாற்றை செப்பனமிட்டுகாட்டும் ஓலைச்சுவடிகளையும் கல்வெட்டுகளையும் புராண நூல்களையும் உள்ளடக்கியது அந்த குமரிகண்டம் என்கிறார்களே அது உண்மையா ? இப்படி பல கேள்விகளுக்கான விடைகளை சேகரிக்க ஆரமித்தனர் இருவரும். சமீபத்தில் இந்திய பெருங்கடலிலிருந்து ‘மொரீஷியஸ்’ கண்டத்தை நார்வே நாட்டு அறிஞர்கள் கண்டுபிடித்ததை வைத்து, இந்திய அரசாங்கத்திற்கு தெரியாமல் நார்வே நாட்டு நிலவியாளர்களிடம் தொடர்பு கொண்டு மண் பற்றியும் கடல் பற்றியும் பல வரலாற்று புராணங்களைப் பற்றியும் தெரிந்து்கொண்டான் கிஷோர் .
இரண்டு வருடங்கள் இந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்தன.
இறுதியில் ‘லெமூரியா’ கண்டம் எங்கு புதையுண்டுருக்கலாம் என்றும் காலபோக்கில் கடலிற்கடியில் எங்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம் என்றும் கணக்கிட்டனர். பல வருடங்களுக்கு முன் கடலில் ஏற்பட்ட ஒரு பெருவெடிப்பு காரணமாக அது நகர்ந்து அட்லாண்டிக் பெருங்கடலில் ‘’சாப்டின் பேலா’’ என்னும் தீவிற்கு 10 கிலோ மீட்டர் அடியில் இருப்பதாக கணக்கிட்டனர் . இந்திய அரசிடம் தங்களின் மொத்த ஆராய்ச்சியையும் வெளியிட்டு பர்மிஷன் வாங்கினர் . அதன் மூலம் பயணத்திற்கு தேவையான மொத்த செலவையையும் இந்திய அரசாங்கம் ஏற்றது,

மதனும் கிஷோரும் , அந்த அயர்லாந்து நாட்டு அரசின் உதவி மூலம் ‘சாப்படின் பேலா’ தீவை அடைந்தனர் . அங்கு அவர்களுக்காக ஒரு ‘’அட்வான்ஷ் டீப் வாட்டர் ஷிப்’’பும் தயாராக இருந்தது. அவர்களுடன் மேலும் இரண்டு அயர்லாந்து நாட்டு புவியியல் அறிஞர்களும் சென்றனர் .
பயணம் தொடங்கியது. 1 கிலோ மீட்டர்…2 கிலோ மீட்டர்..3….4……5……9…..கடலின் தரை மட்டுமே காணபட்டது. ரேடார்கள் மூலம் ஒன்றும் அரியமுடியவில்லை. மதனும் கிஷோரும் கொழப்பத்தில் ஆழ்ந்தனர். ஏனென்றால் அவர்களை நம்பி இந்திய அரசாங்கம் பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது. 10 கிலோ மூட்டர் ,.அதிலும் ஒன்றும் தென்படவில்லை .

நால்வரும் குழப்பத்தில் இருந்தனர் . அந்த இரண்டு வெளிநாட்டு அறிஞர்கள் தங்களின் தகவல் தொடர்பு மூலம் ‘இங்க எதுமில்லை, வெறும் மணல் மட்டுமே உள்ளது என்று தகவல் பறிமாரினார்கள்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் கடலிற்கடியில் ஒரு பெரிய அலை அடித்தது , அதை எதிர்த்து நிற்க முடியாமல் அந்த டீப் வாட்டர் ஷிப் அதிக வேகத்தில் அடித்து செல்லப்பட்டது, நால்வரும் நிலை தடுமாறினர் . திடீரென பூமியின் உள்பகுதியை துளையிட்டு ஒரு நீரோடை பாய்ந்தது , அதில் அவர்கள் ஒலியின் வேகத்திற்கு ஈடாக அடித்துச்செல்ல ,நால்வரும் நிதானத்திற்குள் வருவதற்குள், கண் இமைக்கும் கண நேரத்தில்…..

கடலிலிருந்து திடீரென நிலப்பரப்பிற்கு வந்தனர். அவர்கள் பார்க்காத இடமாக அது இருந்தது. சுற்றிலும் செம்மை , நீளமாக வ அழகான வண்ணவண்ண பறவைகள் , நாகரிகம் அதிகம் வளராமல் தன் உடலை மட்டுமே மறைக்கும் உடைகள் உடுத்துய மனிதர்கள் . ஆம் . அதுதான் லெமூரியா கண்டம் . ‘’ஆப்டனிஸ்’’ என்ற கிரகத்தில் இருக்கின்றது அது, பூமியில் இருந்து காணாமல் போன பல கண்டங்கள் கடலில் மூழ்கி , கடலில் ஏற்பட்ட பெரும் வெடிப்பின் மூலம் ஒலியினால் கடத்தப்பட்டு விண்வெளியில் இடம்பெயர்ந்து , அனைத்தும் ஒன்று சேர்ந்து இன்று ஆப்டனிஸ் கிரகமாக…

மதனும் கிஷோரும் பிரமிப்பில் இருந்தனர் . தமிழர்கள் இருந்தனர்,,விஞ்ஞானம் அதிகம் வளரவில்லை, ஆனால் அனைத்தும் இயற்கை முறையிலே இருந்தது. அந்த இரண்டு அயர்லாந்து அறிஞர்களும் தங்களின் பாக்கெட்டிலிருந்து எதோ செல்ஃபோன் போன்ற சாதனத்தையெடுத்து ரேடார் சிக்னல் அனுப்பினர்…அது பூமியை வந்தடைந்தது…அந்த புது உலகத்தை கைப்பற்ற வேண்டும் என்று அந்த அயர்லாந்து அறிஞர்கள் முடிவெடுத்தனர்… நவீன ராக்கெட்டுகள் மூலம் ரோபோக்களை அனுப்பி வைக்கின்றனர்,. ஒருகட்டத்தில் அந்த விஷயம் மதனுக்கும் கிஷோருக்கும் தெரியவருது,,

இங்கதான் சார் ‘’படத்தோட இன்ட்டர்வெல் ப்ளாக் ‘’ என்றார் கதை கூரிய இயக்குனர்

நடிகர் வாயை திறந்துதாற் போல் பிரம்மிபிலே இருந்தார் ..இப்படி ஒரு கதையை தன் வாழ்நாளில் கேட்டதே இல்லை…

படத்தோட செகண்ட் ஆப் நான் கேக்க தேவையில்ல டைரக்டர் சார். உடனே ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க…என்றார் நடிகர்.

ப்ரொடியூசரும் க்ரீன் சிக்னல் கொடுக்க , இன்டர்நேஷனல் அளவில் தயாரிகியது. அந்த ""இறவா நகரம்"" திரைப்படம்

முற்றும்

எழுதியவர் : பார்கவி தி (3-Dec-16, 12:30 pm)
சேர்த்தது : பார்கவி தி
பார்வை : 212

மேலே