மனம் திறந்திடு

பொன்னகையைச்
சுமந்து வர வேண்டாம்
பெண்ணே உன் புன்னகை
மட்டும் போதும் !

கட்டுக்கட்டாய்
கரன்சி வேண்டாம்
பெண்ணே என்
கவிதைப் பிரசவத்திற்கு
நீ கவிதையானால்
போதும் !

நீ சம்மதம்
சொன்னால் மதம்
மறுப்பு சொல்லாது !
இனம் இடை நிற்காது !

என் கவிதை
முத்துக்களுக்காக
காத்திருக்கிறது
தமிழ்த்தாயின்
மணிமகுடம் !

உன் இதயம்
இசைந்தால் போதும் !
என் கவிதை நதி
கரைபுரண்டோடும் !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (3-Dec-16, 9:58 pm)
சேர்த்தது : காளிமுத்து
Tanglish : manam thirinthidu
பார்வை : 96

மேலே