மீண்டும் வருவாயா

மீண்டும் வருவாயா
தேசத் தந்தையே ! உலகின் விந்தையே !
நாச மாகிறோம் !நலிந்து சாகிறோம் !
நேசம் இன்றி நாட்டில் எம்மை
தூசு போன்று துடைத்துப் போடுறார்
காசு காசு காசு என்றே
காலம் ஓட்டுறார் !கடமை மறக்கிறார்.
பந்த பாசம் யாவும் மறந்து
பணத்தைச் சேர்க்கிறார் !பண்பை இழக்கிறார் !
இந்த தேசம் நமது தேசம்
விந்தை பலவும் கண்ட தேசம்
மந்தை போல ஆகிப் போச்சு
மடமையாலே யாவும் போச்சு !
மனதை மயக்கி மதங்க ளெல்லாம்
இனத்தை இங்கே அழிக்க லாச்சு !
பிணத்தைக் கூட பிடுங்கி இங்கே
பெரும் பணத்தைச் சுருட்ட லாச்சு !
தெருவெல்லாம் சாராயம் இங்கே
தண்ணி போல ஓட லாச்சு !
சாதி சண்டை இன்று இங்கே
சலிக்காமல் நடந்திடலே ஆச்சு !
உரிமை எல்லாம் உளுத்துப் போச்சு
வறுமை இங்கு வளர லாச்சு
வாக்குப் போடும் உரிமை இங்கே
போக்குக் காட்டி போக லாச்சு !
நாணயமும் நாணயத்தால் நலிந்து
போன இடமும் புரியாமல் போச்சு !
உண்மை இங்கே உறங்கிப் போச்சு
உண்ணா விரதம் பொய்துப் போச்சு
காந்தியமும் காலடியில் கிடந்து
இங்கே மடிந்து போக லாச்சு !
சுதேசிகள் சிறுத்துப் போக லாச்சு !
விதேசிகள் விங்கிப் போக லாச்சு !
தேசப் பிதா காந்தியே ! நீங்கள்
பிறந்து இங்கே வரலாமா- எம்
பேதமைக் களையினைக் களைந்து விட்டு
புதுமை ஏதேனும் செய்ய லாமா ?

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (3-Dec-16, 6:38 pm)
Tanglish : meendum varuvaayaa
பார்வை : 60

மேலே