தாசியின் துயரம் உயிர் பிரியும் வேளை வஞ்சி விருத்தம்

தாசியின் துயரம் ... உயிர் பிரியும் வேளை !!
வஞ்சி விருத்தம் ..
கூடவந்த கூட்டமும் எங்கேயென்
கூடுவிட்டு ஆவியும் போகையிலே
பாடுபட்டு சேர்த்த பணமெல்லாம்
பாவியர் தாரைவார் தாரெங்கே
தனம் தந்து என்னுடல் தீண்டி
தனம் தொட்டு முத்தமிட்டு ராப்பகல்
காத்திருந்து பார்த்திருந்த வித்தகர்
எத்தனையோ பேர்களை நானறிவேன்
இத்தொழில் ஈடுபட்டால் சட்டத்தால்
குற்றமாகும் மென்றுசொல்லிச் சென்றவரும்
செத்துநான் வீழும்முன் இத்தொழிலில்
எத்தனை பெண்வீழ்த் திடுவார்
காதலென்ற போர்வையிலே காதலித்து
கற்பிழந்து கண்ணீர் வடிக்கின்ற
பெண்களைக டைவிரிக்க வற்புறுத்தும்
குற்றவாளி எத்தனைபே ருள்ளாரோ
இச்சையின்றி ஈடுபட்ட என்போன்றோர்
ஆடவர்கிச் சைதீர்க்கும் இத்தொழிலை
துச்சமென்று கூறியே இன்னமும்
கொச்சைப் படுத்தல் தகுமோ
03-12-2016
தனம் = பணம், மார்பகம்