விண்ணப்பம்

அச்சில் ஏறாத
கவிதை நீ !

அதிசயங்கள் ஏழு
என்பது பொய்யாகும் ,உண்மையில் அதிசயங்கள்
ஏழும் உன் பெயருக்குப்
பின்னால்தான்
தொக்கி நிற்கும் !

உன்னை அடையாளம்
காணாத உலகத்தின்
கண்கள் நிச்சயம்
ஊனமேயாகும் !

ஐம்புலன்களால்
அறிய முடியாத
அதிசயம் நீ !

உன்னிலிருந்துதான்
கிளம்புகிறது என்
கற்பனை ஊற்று !
இனி திக்கெட்டும்
சுடர்விடும் உன்னால்
செந்தமிழெனும்
ஒளிக்கீற்று !
உன் மௌனத்தின்
கூச்சலில் தொலைகிறது
என் தூக்கம் !

தேவதைகள்
வரம் தர
மறுப்பதில்லையாம் !

ஆம் தேவதையே
நீயும் என் கவிதைக்கு
கவிதைக்கு (தமிழுக்கு)
தலைவணங்கு !

என் காதலுக்கு
நீ இணங்கு !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (3-Dec-16, 10:36 pm)
சேர்த்தது : காளிமுத்து
Tanglish : vinnappam
பார்வை : 73

மேலே