மழை

தன்னைப்பிரிந்து மற்றவர்களை சுமக்கும் மன்னவனை தொட வருகிறாள்.,பருவ காலத்தில்..
இவளின் ஆனந்தத்தை அறிந்த அண்ணன் தாண்டவாமாடுகிறான்.. அதிர வைக்கும் புன்னகையில்...
அக்காவை தன் மாமனோடுச் சேர்க்க காரிருள் நிறத்தில் பந்தலிடுகிறான் பரவசமாக., அழகிய தம்பி.
உலகை ரசிக்கும் பரமதயாளன்.., இவர்களை சேர்த்து வைக்க மறுக்கிறான் நிரந்தரமாய்..,
இறைவா.., என் தோழியை தன் காதலனோடு கொஞ்சமாவது பேச விடு.. அடிக்கடி..,
அவளின் ஆனந்த கண்ணீரில் உனக்காய் தொடுக்கும் பூமாலை புன்னகைக்கும் புனிதமாய்..,
பிறர் அன்னம் உண்ண தன் பசியை மறந்த எஙகள் விவசாய நண்பன்.., பூறித்து போவான், உன் தயவில்..
என் தங்கை தம்பி பாப்பாக்கள் படகோட்டி ஆவார்கள் தத்தம் கவலைகளை மறந்து..
உன் கடைக்கண்ணால் அனுமதித்து விடு அவளை,.. உன் கைம்மாறுக்காக நாளை உன் முன் வீற்றிருப்பாள் புனித ஜலமாய்...

எழுதியவர் : தாடியில்லா கேடி கவிஞன் (3-Dec-16, 11:45 pm)
Tanglish : mazhai
பார்வை : 127

மேலே