உன் இதழ்களில் பருக நினைத்த நீர்த்துளி 555

என்னவளே...
மழைமேக வானவில்லை
காணும் போதெல்லாம்...
உன்னோடு சேர்ந்து
நான் நனைந்த...
அந்த இனிய நாள் என்னில்
வந்து வந்து செல்லுதடி...
நீயும் நானும் ஒதுங்கி நின்ற
அந்த ஒற்றை மரம்...
மழைநீர் தாங்கிய இலைகள்
நம்மை நனைத்ததடி...
உன் நேர்வகிடில்
இறங்கிய நீர்த்துளி...
மெல்ல இரங்கி
நெற்றியை தொட்டு...
நாசிவழியே இதழ்களில்
தேங்கியபோது...
அந்த துளிநீரை மட்டும்
பருக நான் ஆசைகொண்டேனடி...
நாம் இருவரும்
நெருங்கி நின்றபோது...
வேகமாக வீசிய காற்றுக்குக்கூட
இடமில்லாமல் போனது...
நனைந்தும் நனையாமல்
இருந்த என் கைக்குட்டையை...
நான்
உன்னிடம் கொடுத்தேன்...
உன் நெற்றி தொட்டு
நான் பருக நினைத்த...
நீர்த்துளி தொட்டு
என்னிடம் கொடுத்தாய்...
முழுவதும் நனைந்ததடி
என் கைக்குட்டை...
குளிரில் நடுங்கிய என் இதழ்களுக்கு
நீ அனுமதி கொடுக்கவில்லை...
துடித்த என் இதயத்திற்கு
துடிப்பாக நீ இருந்தாய்...
அந்த இனிய நாளை
நான் எப்படி மறப்பேன்...
என் அன்பு மனைவியே.....