தமிழகம் தவிக்கிறது தானைத் தலைவியின் பிரிவில்
மாண்புமிகு
தமிழக முதல்வர்
செல்வி. ஜெ.ஜெயலலிதா
பள்ளிப் படிப்பில்
உச்சம் தொட்டவர்...
கலையுலகிலும்
அரசியலிலும்
உயரம் தொட்டவர்...
எழுத்துலகிலும்
பரிச்சயமானவர்...
மக்கள் உள்ளங்களை
வென்றவர்...
திசைகளை இவரது
ஆசான்கள் காட்டினாலும்
தனக்கென வழிகளைத்
தானே தேர்ந்தெடுத்தவர்...
ஜெயலலிதா எனும்
ஒற்றைச்சொல்... பேசத்
தெரிந்த இந்திய
உதடுகள் அனைத்தும்
உச்சரித்த ஒரு வார்த்தை...
ஓரிரண்டு ஆண்டுகளல்ல
அரை நூற்றாண்டாய்...
ஐம்பது ஆண்டுகளின்
அத்தனை நாட்களிலும்
கோடானு கோடி
இதயங்களில் வாழ்ந்தவர்...
அரசியல் வாழ்வில்
ஆதரித்தோர் எதிர்த்தோர்
நடுநிலையோர் யாவரையும்
தன் தனித்திறமையால்
ஆட்கொண்டவர்...
கொஞ்சம் கொஞ்சமாய்
வளர்ந்தவரல்ல இவர்...
தேர்ந்தெடுத்த
துறைகளிலெல்லாம்
வளர்ந்தபின் வாழ்ந்தவர்...
மொழிகளில் தேர்ந்தவர்
பள்ளிப் படிப்பில்
மாநில அளவில்
சிறப்பு பெற்றவர்
கலையுலகில்... நடிப்பிலும்
நடனத்திலும் நிகரற்றவர்..
அரசியல் நிர்வாகத்தில்
ஆற்றல் பெற்றவர்...
தேர்தல்களிலும்
கொள்கை முடிவுகள்
எடுப்பதிலும் தான் மட்டும்
எனும் ஒருமையால்
பன்மைகளை பலநேரங்களில்
ஜெயித்த ஜெயலலிதா
எல்லாத் தருணங்களிலும்
இழக்காமல் இருந்தது
துணிச்சலும் உத்வேகமும்...
தேர்தல் களங்கள்
பலவற்றை வென்று
தனதாக்கிக் கொண்டவர்...
முந்தைய சாதனைகளை
முறியடித்தவர்...
இந்தியர்களையும்
இந்தியத் தலைவர்களையும்
பிரமிக்க வைத்தவர்...
அன்னை தெரசாவோடு
அளவளாவியவர்...
தமிழகத்தின்
முன்னேற்றத்துக்கு
சிறந்த பங்காற்றியவர்
தொண்ணுத்தொன்று
இரண்டாயிரத்தொன்று
இரண்டாயிரத்துப்
பதினொன்று...
அதையும் தாண்டி
இரண்டாயிரத்துப்
பதினாறு தேர்தல்கள்
இவர் வசத்தில் வந்தன...
தமிழக அரசாணைகள்
இவரது கையொப்பத்திலும்
அனுமதியிலும் பிறந்தன...
ஒட்டுமொத்த தமிழகத்தையே
தன் குடும்பமாக நினைத்ததால்
தனக்கென ஒரு குடும்பத்தை
ஏற்படுத்திக்கொள்ளவில்லை...
அர்ப்பணித்துப் பணியாற்றுவதில்
'அம்மா' இவருக்கு இணை இவரே!
தமிழகத்தில்
அறிஞர் அண்ணா
கர்மவீரர் காமராஜர்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
டாக்டர் அப்துல்கலாம்
ஆகியோருக்குப் பிறகு
புரட்சித்தலைவி ஜெயலலிதா
மறைவால் உலகெங்கும்
அதிகத் தமிழ் இதயங்கள்
அதிர்ச்சி அடைந்து
அழுகின்றன இன்று...
ஆற்றொண்ணாத் துயரில்...
தானைத் தலைவியின் பிரிவில்
தமிழகம் தவிக்கிறது...
இந்திய வரலாற்றில்
ஜெயலலிதாவிற்கு என்றும்
உண்டு சிறப்பிடம்...
அவரில்லா இடம் வெற்றிடம்...
அதிகாரத்திலுள்ள
அத்தனை பேர்களையும்
தன் ஒருவரின் கட்டுப்பாட்டில்
இயல்பாய் வைத்திருந்த
மண்ணுலகில் இவரது
ஆளும் நேர்த்தி கண்டு
விண்ணுலகம் தம்மைச்
செப்பனிட்டுக் கொள்ள
இவரைத் தம்மிடம்
அழைத்துக் கொண்டதோ...
இறந்த செய்தி கேட்டு
இதயம் கனக்கிறது...
தேர்ந்த மருத்துவத்தில்
பிரிந்த செய்தி மீண்டும்
பொய்யாகிப் போய்விடாதா
என மனம் எதிர்பார்க்கிறது..
சாதனைப்பெண்
மாண்புமிகு தமிழக முதல்வர்
செல்வி. ஜெ.ஜெயலலிதாவின்
ஆன்மா சாந்தியடையட்டும்...
இவண்
துயரத்தில் பங்கு கொள்ளும்
சுந்தரராஜன் ராஜகோபால்...
😭😭😭