தேடி அலைகிறேன் --முஹம்மத் ஸர்பான்

ஒவ்வொன்றாய் திருடுகின்றாய்
கண்களை ஏன் பார்த்தாய்
என் தூக்கம் வயதாகிப் போனது
புன்னகையில் பூக்கள் பூத்தாய்
பொன் நகையில் சிலையானாய்
இடது பக்க இதய அறை
உன் பெயரை பச்சை குத்தியது
வலது பக்க இதய அறை
என் உயிரை உயில் எழுதியது
வானத்தை பார்த்து சிரித்தேன்
காதல் தூதாய் வெள்ளி நிலா
தாயின் மடியில் தூக்கம் தேடி
இன்னோர் தாயாய் என்னவளை
மனதில் சுமந்து வாழ்கிறேன்
கல்லறை கடிதங்கள் படித்தேன்
எனையறியாமல் விம்மி அழுதேன்
காதலுக்கு மட்டும் பூலோகத்தில்
இன்னும் எத்தனை எதிரிகள்
எங்கெங்கு ஒளிந்து இருக்கின்றீர்
தாகம் கூட கடலளவானது
கண்ணீர் கூட அணை கட்ட
மறந்து போன பரிதாபம் எனக்குள்
நதிகளின் கடவுச்சீட்டில் நானும்
என் காதலும் பயணிக்கின்றோம்
மரணத்தை வெல்லும் தவம் தேடி
காதலுக்காக ஓயாமல் திரிந்தேன்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (6-Dec-16, 1:12 pm)
பார்வை : 163

மேலே