தலைவி

உன் வரலாறு தெரிந்திரவில்லை
உன் அசையா உடலை கண்டு
மனம் கலங்க மறுப்பதில்லை
சிறந்த ஒரு பெண்மணியாய் திகழ்ந்தாய்
அரசியலில் புரட்சி செய்தாய்
அம்மாவாகி தமிழகத்தை காத்தாய்
உன் உடலை காக்க மறந்து போனாய்
உன் தியாகத்துக்கு நீயே உதாரணம்
பலரும் எதிர்க்க தனியாய்
போரிட்டாய் - பல நாவும்
பல பேச தகர்த்தாய்
உன் விவேகத்தில் ......
இருக்கும் இடத்தில் எல்லாம்
முதன்மை பெற்றாய்......
உன் கண்ணிய பேச்சில்
மவுனித்த தமிழகம் - இப்போது
மவுனத்தின் உருவமாய்
உன் மறைவில் வாடி......
போராடி போராடி
பல சாதனை புரிந்து - இன்று
மரணத்திடம் தோற்றாய்
எங்கள் தலைவியே!!!!!
உன் வரலாறு இனி அறியும்
வரும் தலைமுறை

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (6-Dec-16, 1:26 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : thalaivi
பார்வை : 284

மேலே