கவிதை அஞ்சலி

அம்மா, அம்மா. ...
எனும் உறவுகளை இயதத்தில்...
சுமந்தவளே. ....
மேலும் சேர இடமில்லை என்றா?...
இதயத்தை அடைத்து கொண்டாய்...
கண்ணீருடன் ஒரு பெரும் கூட்டம். ..
உனக்காக அழுகிறதே...
கண் துடைக்க கை தருவயா? ...
அன்னமிட்ட தாயே...
இன்று உண்ணாமல் இருக்கிறேனே...
உணவூட்ட எழுவேயா?
இவ்வளவு,பிள்ளைகளை...
வயிற்றில் சுமந்திருக்க....
இயற்கையில் இயலாது...
இதயத்தில் சுமந்தவளே
கண் திறந்து பாரம்மா. ...
நேத்து கூட நெனச்சேனே. ..
ஐந்தாண்டுக்கு இருக்குன்னு...
இன்றோடு முடிச்சேயே. ...
போடா நீயும் தவியுன்னு. ..
கண்ணீருடன் போகிறேன்....
ஊருக்கு...
கரையில் நீயிருந்து...
கையசைத்து வழியனுப்பு...

எழுதியவர் : (6-Dec-16, 12:04 pm)
சேர்த்தது : குருமுருகன்
Tanglish : kavithai anjali
பார்வை : 100

மேலே