கண்ணீருடன் ஒரு கவிதாஞ்சலி
அம்மா என்ற
சொல்லுக்கு
தமிழகத்திற்கு
உன் முகம்தான்
அடையாளம் !
சாதாரணமாய்
பிறந்து சரித்திரமாய்
மறைந்தாய் !
சரித்திரத்தில்
இடம்பெறவில்லை நீ !
சரித்திரமாகவே
வாழ்ந்தாய் நீ !
அரிதாரம் பூசி
ஆரம்பித்த வாழ்வு
அவதாரமாக முடிந்தது !
ஆளுமைக்கு
அர்த்தமாக அகராதி
இனி உன் பெயர்தான்
உச்சரிக்கும் !
அவதூறு உன்மேல்
ஆயிரம் சொன்னாலும்
அசைக்க முடியாத
சிகரம் நீ என்பதே
உன் சிறப்பு !
இழிமொழிகளும் வசைமொழிகளும்
மழையாய் பொழிந்தாலும்
வாழ்வாங்கு வாழ்ந்ததே
பெரு வியப்பு !
வைராக்கியத்தின் வடிவமே !
உலக வரலாற்றில் நீ
அழிக்க முடியாத
சக்தி .... !
தமிழக மக்களுக்கு
நீயே நவயுக சக்தி !
நாங்கள் பிரார்த்திக்கிறோம்
உன் ஆத்மா
பெற வேண்டி முக்தி !
தங்கத்தாமரையே !
உனக்கு என் கண்ணீருடன்
கூடிய கவிதாஞ்சலி
சமர்ப்பணம் !