அம்மா இரங்கல் கவிதை

அம்மா
;
;
;நீங்கள் ஆறுமுறை ஆட்சி பீடம்
கைப்பற்றியது அல்ல சாதனை
அறுசுவை உணவு அளித்தது
இல்லை உமது சாதனை

மடிக்கணினி வழங்கியதும்
அல்ல உமது சாதனை
காவிரியை பெற்று தந்ததும்
அல்ல உமது சாதனை

தாலிக்கு தங்கம் தந்ததும்
அல்ல உமது சாதனை
வீட்டு உபயோக பொருள்
தந்தது அல்ல உமது சாதனை

இலவச அரிசி வழங்கியது
அல்ல உமது சாதனை
மிதிவண்டி வழங்கியது
அல்ல உமது சாதனை

தொட்டில் குழந்தை திட்டம்
அல்ல உமது சாதனை
இலங்கை தமிழருக்கான
குரல் கொடுத்தது அல்ல
உமது சாதனை ...

நிஜமான சாதனை எது
தெரியுமா அம்மா ????
நீங்களே சொல்ல கேட்டிருக்கிறேன்

என் நிஜப்பெயர் மறந்து போனது
நீங்கள் சொல்லும் அம்மாவே
என் பெயர் ஆனது ....
அதுதான் அம்மா நிஜமான
சாதனை
அதுபோதும் நிம்மதியாய்
நீ தூங்க ...
பிள்ளையாய் அழைத்துக்கொண்டே
இருப்போம் ...
இனி கேட்குமா உங்களுக்கு ?????


கண்ணீருடன் உங்கள் பிள்ளையில் ஒருவன்
ருத்ரன்

எழுதியவர் : ருத்ரன் (7-Dec-16, 8:18 pm)
பார்வை : 1437

மேலே