தோல்விகள்

தோல்விகள் ....
வாழ்வில் காணும் புதையல்கள் ..!
வெற்றி எனும்
செல்வம் பெற்றிட ...

தோல்விகள் ...!
வாழ்வின் நிஜத்தை போதிக்கும் ...!
போலியான உலகை
அறிந்து செயட்பட....

தோல்விகள் ....!
பொறுமையை அழகாய் போதிக்கும் ...!
முயட்சிகள் செய்து
பார்ப்பதன் அவசியத்தை ...

தோல்விகள் ....!
வாழ்வில் உயரத்தை தொடவைக்கும் ..!
தன்னம்பிக்கை கொண்டு
போராடிச் செல்வதால் ....

தோல்விகள் ...!
எல்லோரும் அனுபவிக்க வேண்டியவை
சாதனை புரிந்து
உலகை வென்றிட ...!

எழுதியவர் : பச்சைப்பனிமலர் (8-Dec-16, 5:44 pm)
Tanglish : tholvigal
பார்வை : 222

மேலே