என் உறவு மீது ஏக்கம்
உடலுக்கும் உயிருக்கும் என்ன உறவோ....
அது தான் உனக்கும் எனக்கும் உள்ள உறவு...
அதனால் உன் உறவுகளின் பெயரை சொல்லி என்னை உன் இதயத்திலிருந்து ஒதிக்கி வைக்காதே....
நானும் உந்தன் உறவுதான் என்பதை மறந்து....
ஒரு செடியில் பூ ஒன்று பூத்து உதிர்ந்தது...
அதை பார்த்த துக்கத்தில் செடி வாடி போனது....
பூ உதிர்ந்தாலும் செடியின் அன்பு உதிரவில்லை...
அந்த செடியின் அன்பை வெளிப்படுத்துகிறது.....
இதை போல் நான் கொண்ட அன்பை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறேன்..
நீயும் என் காதலை புரிந்து கொள்ளாமல் என்னை வதைக்கிறாய்...
என் அன்பை தான் புரிந்து கொள்ள மறுக்கிறாய்....
என் தவிப்பையாவது புரிந்து கொள்ள மாட்டாயா என்று .....
தினமும் நான் உன் நினைவில் ஏங்கி தவிக்கிறேனடி....
அன்புடன் கிருபா...