யானையின் சினம்

வேட்டையாடும் மனிதர்களைப் பார்க்க வந்தாயோ?...
சேட்டைகள் தெரியுமென்று காட்ட வந்தாயோ?...
காட்டை அழித்தது இவர்களென்று தெரிந்ததோ?...
வீட்டுக்குள் இருந்தாரென்று பேருந்தை இடிக்கின்றாயே......


கருமை நிறம் கொண்ட வேழமே...
கருணை இல்லா தவர்களென்று விரட்டுகிறாயோ?...
உன்னைவிட வேகமாய்ப் பேருந்து செல்கிறதென்று
உனது தும்பிக்கையால் அதனை உடைக்கின்றாயோ?......


மனிதர்களைப் போல இன்று உனக்கும்
கோபத்தால் மூளை செயல்திறன் இழந்ததோ?...
மதம் கொண்டு இச்செயல் செய்வார்
மதம் பிடித்ததும் இதனைநீ செய்கின்றாயோ?......

எழுதியவர் : இதயம் விஜய் (9-Dec-16, 9:54 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 1504

மேலே