பேராசைகாரன்

உன்னைத் தொட வேண்டி தவம் கிடக்கும்
என் கைகள் அருகில் வந்து நின்று
வெட்கம் கொள்வதேன்?
இளம் பெண் அலை...!

என்னை இழுத்துச் செல்ல முயல்கிறது
உன்னிதழ் புன்னகை...!

பின்னி பிணைந்திருக்கும்
உன் கார்மேகக் கூந்தலை
பிரித்து விரித்து
சூரியன் வெளிச்சத்தை மறைத்து
உருவாக்கியதேன்?
கார் மேகத்தை...!

மழையாய் பொழிந்து
தீர்ப்பாயா?
என் மோக தாபத்தை...!

எழுதியவர் : கிச்சாபாரதி (12-Dec-16, 12:30 pm)
பார்வை : 130

மேலே