தீபஒளி

கார்த்திகை திருநாளில்
தெருவில் இருக்கும்
தெருவிளக்குகள் எல்லாம்
தெம்மாங்காக என்னை கண்டு
சிரிக்க!
சிதறாமல் ஊற்றிய எண்ணையில்
சிறப்பாக எரிந்து கொண்டிருக்கும்
ஏழையின் தீபம் நான்!!,

ஒளி என்னும் வளிம்பில்
மின்னின்றி மின்விளக்குகள்
அனைய
மின்மினிப்பூச்சியாக மின்னும்
என் ஒளியில்
தோற்றுப்போனது எத்தனையோ
மின்விளக்குகள்!!!

என்னைகாண இருளானது
தேடிவர
என் தோழியாக தொலைவானில்
உள்ள வான்மீனும் நானும்
சிறு ஒளியில்
பெரும் அழகினை காட்டுகின்றோம்
என்னை காண்பவர்களுக்கு!!!!!!!!

இப்படிக்கு
தீபஒளி

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (12-Dec-16, 12:40 pm)
பார்வை : 91

மேலே