பல விகற்ப பஃறொடை வெண்பா தென்பொதிகை தென்றல்போல் வந்தே தழுவியவள்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..

தென்பொதிகை தென்றல்போல் வந்தே தழுவியவள்
பண்ணிசைத்து தெம்மாங்கு நம்மனமாட்க் கொண்டவள்தான்
வங்கக் கடலோர வார்தா புயலாக
வீசியிங்கு செல்லுகையில் பூமகள் மீதாங்கு
வீழ்கின்ற நீருண்டு சேதாரம் ஏதுமின்றி
பொங்கியெழ வேண்டும் பயிர்

12-12-2016

எழுதியவர் : (12-Dec-16, 12:28 pm)
பார்வை : 76

மேலே