பாட்டி சொன்ன கதை
பாட்டியின்
பதினாறாம் நாள் காரியத்தில்
பணியாரம் சுட்டார்கள்
பாட்டி பகவானிடம் சென்று விட்டாள் என்று
பாட்டியின் பாசத்தை பணியாரத்தில் பார்த்தேன்
பற்கள் பணியாரத்தை பிசைந்த போது
புண்பட்ட என் மனம் பாட்டியின் பிரிவை எண்ணி வருந்தியது...
பண்பட்ட என் மனம் பாட்டியின் அனுபவ அறிவை அசைபோட்டது...
பேரன் எனக்கு பாட்டி சொன்ன கதை...