விதி செய்த குற்றம் -
இப்போது வெங்கட் என்னும் வெங்கட்ராமன், ஐ.ஏ.எஸ் , உத்தரபிரதேசத்தில் பெரிய அதிகாரி.
அவன் திரும்பிப்பார்க்கிறான் தன பழைய,கடந்த வாழ்க்கையில் நடந்த சில திருப்பங்களை.
இருபது வருடத்திற்கு முன்னதாக அவன் வாழ்க்கையில் நடந்த கதை இப்போது நான் கூறப்போவது.
வெங்கட் அப்போது தன பெற்றோர்களுடன் தாம்பரத்தில் வசித்து வந்தான். அவன் தந்தை ஒரு
தாசில்தார்; தாய் இல்லத்தரசி; அவனுக்கு ஒரு தங்கை , இள நிலை விஞான பட்டம் பெற்று ,
அங்கு தாம்பரத்தில் ஒரு கான்வென்ட் இல் விஞான ஆசிரியை ஆக பணியில் சேர்ந்தாள் .
வெங்கட்,மாநிலக் கல்லூரியில் முது நிலை பௌதீக பட்ட படிப்பில் இறுதி ஆண்டு படித்து
கொண்டிருந்தா. தினமும் மின்சார ரயிலில் சென்னைக்கு பயணித்தால். அங்கிருந்து,பல்லவன்
போக்குவரத்தில் கல்லூரிக்கு சென்று வருவான். அவன் ரயிலில் பயணிப்பது முதல் வகுப்பில் -ஆம்
அப்போதெல்லாம், மாணவர்களுக்கு ரயிலில் பயணிக்க சலூகைப் பாஸ் உண்டு.
அவன் ரயில் பயணத்தில் ஒரு நாள் சாருலதா வின் பரிச்சயம் கிடைத்தது அது விரைவில் நட்பாய்
மாறியது. சாறு என்னும் சாருலதா , சென்னையில் ஒரு பிரபல மகளிர் கல்லூரியில் பொருளாதாரத்தில்
இளநிலை பட்டப் படிப்பின் இறுதியாண்டில் படித்து வந்தாள். வெங்கட், சாறு, இருவரும் தவறாமல்
ஒரு குறிப்பிட்ட நேர ரயில் பிடித்து காலையில் கல்லூரிக்கு பயணிப்பர்; பின்னர் மாலையிலும்
பலபோது ஒரே நேரத்தில் தான் வீடு திரும்புவார்.ரயில் பயணத்தில் அவர்கள்; நடப்பு காதலாய்
மலர்ந்தது.இந்த காதல் விரைவிலேயே வெங்கட் தங்கைக்கு தெரிய , ஆவல் தன தாய்க்கு தெரிவிக்க
குடும்பத்திற்கே விரைவில் தெரிந்து அம்பலம் ஆயிற்று.வெங்கட் தங்கை சுசரித்ரா வும் சாறு வின்
மாமி தங்கமும் ஒரே பள்ளியில் ஆசிரியர்கள் .ஆம் சாருவின் மாமி அந்த பள்ளியின் தலைமை
ஆசிரியை.சாரு, சிறு வயதிலேயே ,தாயை இழந்தவள்; அவள் தந்தை அதன் பின் இரண்டாவது
திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார்; சாரு அவள் மாமன். மாமியின் அரவணைப்பில் அவர்கள்
பெண் போல் வளர்ந்தால்; அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் ஒரு நாள் வெங்கட்-சாரு காதல் சாரு வின் மாமிக்கு தெரிய வந்தது ,வெங்கட்டின்
தங்கை சுசரித்ரா மூலமாக. உடனே, அவள் வெங்கட்டின் தாயை ஒரு நல்ல நாள் வீட்டிற்க்கு அழைத்து
சாருவை வெங்கட்டுக்கு திருமணம் செய்து தர சம்பந்தம் கேட்டாள்.வெங்கட்டின் அன்னை வெங்கட்டின்
தந்தையை கலந்தாலோசித்து நல்ல பதில் சொல்வதாய்க் கூறி சாருவின் மாமியிடம் விடைபெற்றாள்.
வெங்கட்டின் தந்தை,கிருஷ்ணன் ,தாம்பரத்து பக்கத்தில் ஒரு தாலுகாவில் தாசில்தார்.
ஓய்வுபெற நான்கு வருடங்கள் பாக்கி. அவரை அவர் மனைவி, அதாவது வெங்கட்டின் அன்னை
வெங்கட்-சாரு காதல் விவகாரம் மெல்ல சொல்லி அவர்கள் திருமணம் பற்றி சாரு வீட்டில் அவள்
மாமி ஆசைப்பட்டதை அவரிடம் கூற, அவரோ இன்னும் நான்கு வருடத்திற்கு வெண்காட்டுக்கு
திருமணப் பேச்சே இல்லை என்றார்; என் எனில் அவருக்கு வீட்டின் பேரில் இன்னும் கடன் மற்றும்
வெங்கட் தங்கை சுசித்ராவிற்கு திருமண செலவுக்கு சேமிப்பு இவைகளை சுற்றி காட்டினார்
இதைக் கேட்டு வெங்கட் அதிர்ந்தான்.அவன் தாய் இந்த செய்தியை சாருவின் மாமிக்கு எப்படி
தெரிவிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.ஒரு வழியாக சுசித்ரா மூலமாக சாருவின் மாமிக்கு
திருமணத்திற்கு நான்கு வருடங்கள் பொறுக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
இதற்கிடையில் வெங்கட் ஐ.ஏ.எஸ். இல் தேர்வு பெற்று பயிற்சிக்காக முசூரி சென்றுவிட்டான்.
போகும் முன் சாருவை சந்தித்து தன வாழ்வில் சாருவைத் தவிர வேறு பெண் இனி இல்லை என்றும்
நான்கு வருடம் களைத்து கண்டிப்பாக அவளை மனம் புரிவதற்கு சத்தியம் செய்து கொடுத்தான்.
அவளும் தன இருதயத்தில் வெங்கட் ஐ என்றோ கணவனாக தரித்து விட்டதாயும் அவன் தான்
எல்லாம் எப்போதும் என்று கூறி இருவரும் விடைப் பெற்று கொண்டனர்.
ஆனால் விதி இவர்கள் வாழ்க்கையை வேறு விதமாக அல்லவா பார்க்கிறது.பாருங்கள்.
வெங்கட்டின் அத்தை, அதாவது வெங்கட்டின் தந்தைக்கு சொந்த ஒரே அக்கா சீதா செங்கல்பட்டில்
வசித்து வந்தாள்; அவளுக்கு ஒரே மகள் வேதவல்லி;நல்ல பாங்கான அழகிய பெண்; வேடவள்ளிக்கு ஒரே
மகள் , ஆசை மகள்; வெங்கட் தந்தை கிருஷ்ணனிடம் உயிரே வைத்திருந்தார் அவர் தமக்கை;
விதி வசத்தால் அவளுக்கு புற்று னாய் தாக்க, இறக்கும் முன் கிருஷ்ணனிடம் தன மகளை வெங்கட்
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விஞாபித்து அதற்க்கு கிருஷ்ணனும் சத்தியம் செய்து
கொடுத்தார்.இதை எப்படி கூறுவது வெண்காட்டுக்கு என்று எண்ணி வெங்கட்-சாரு திருமண
பேச்சு ஏதோ சால்ஜாப்பு சொல்லி விட்டு விட்டார்.அதில் மனிதர் கொலையாகி விட்டார்.
விதி வசத்தால் ஐ.ஏ.எஸ் பயிற்சி முடிந்து வெண்காட்டுக்கு உத்தர பிரதேசத்தில் போஸ்டிங்.
சாரு படிப்பு முடித்து தமிழக சர்வீஸ் கமிஷனில் தேர்வுபெற்று உதவி கலக்டர் ஆனார்.
வேளையில் சேர்ந்து மூணு வருஷத்தில் அவள் மாமி இறக்க , உடனே அடுத்த வருடம் அவள் மாமனும்
இறக்க , தனி மரமாகிவிட்டாள். ஆனால் வாழ்க்கையில் நம்பிக்கையை விடவில்லை.வெங்கட் ஐ மறக்கவில்லை
ஆனால் வெங்கட் இருதலைக் கொள்ளி போல் தவித்தான். கடைசியில் வேறு வழி இல்லாமல்
தன அத்தை மகளையே மணந்து கொண்டான். தன தந்தையைப் போல் கோழை ஆகிவிட்டான்.
தன திருமணத்தை சாருவுக்கு தெரிவிக்கவும் தவறிவிட்டான்.
ஒரு வழியாய், சாருவுக்கு ஒரு நாள் வெங்கட்டின் திருமணம் தெரிந்து போனது.அவள் அதிர்ச்சி அடைந்தாள்.
ஆனால் அவளை பொறுத்தவரை அவள் வாழ்க்கையில் இனி வேறு மனிதருக்கு இடம் இல்லை.
இதற்கிடையில் ஒரு ஆல் இந்தியா கனபெரென்ஸ் ஒப்பி ஐ.ஏ.எஸ் ஆஃபீஸ்ர்ஸ் சென்னையில் நடக்க
அதன் ஆர்கனிசிங் செக்ரட்டரி ஆக சாரு நியமிக்கப் பட்டாள்.கனபெரென்ஸ் அன்று வெங்கட் தற்செயலாய்
சாருவை சந்தித்தான். அடர்ந்து பொய் விட்டான். அவன் இருபது வருடத்திற்கு முன்னாள் பார்த்த
கல்லூரி மாணவிப் போலவே சாரு அழகின் பொகிஷமாய் இருந்தால்.இருவரும் பரஸ்பரம் விசாரித்து
பின் வெங்கட் ஏதேதோ சொல்ல முயற்சிக்க சாரு அதை தடுத்தி நிறுத்தி .,வெங்கட் நீங்கள் இப்போது
வேறொருவர் கணவன் அவளுக்கு நீங்கலாய் இருங்கள் அதுவே என்னை வாழவைக்கும்; எனக்கு
இனி வேறு ஆடவன் மனதில் இல்லை, அது உன்னோடு பொய் விட்டது என்றாள்; அவனுக்கு நாள் வாழ்த்து கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
இப்போது ஹோட்டலில் தனியாக தன அறையில் வெங்கட்.யோசித்தான் தான் செய்தது தவறா, செரியா
என்று அவனுக்கு புரியவில்லை; ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது.அதுதான், சாரு இருபது வருடத்திற்கு
முன் எப்படி இருந்தாலோ அது போல் இன்றும் இருப்பது, அவள் இதனை நாள் தன மனதில் வேறோர்
ஆன் மகனை காதலனாய் ஏற்காததால் இருக்குமோ என்று நினைத்தான்!
அன்று மஹாபாரதட்த்தில், கௌரவர்கள் தாய் காந்தாரி தன கணவனுக்காக தன கண் பார்வையை
தானே கட்டி நிறுத்தி கணவனுடன் பார்வையற்றவளாய் வாழ்ந்தாள்; பதிவிரதை அவள் சக்தி
அவள் பார்வையில் இருந்ததாம் ! அது போல தன வாழ்வில் வெங்கட்டையே நினைத்து அவன் இல்லை என்றவுடன் வேறோர் ஆணை அவள் மனம் ஏற்கவில்லை.அவளும் பதிவிரதை- ஆனால் திருமணம் ஆகாத
பத்தினி தெய்வம் என்று தீர்மானித்தான்.வெங்கட்.
தன்னை நினைத்து வேதனைப் பட்டான்.
இது என்ன காலம் செய்த கோலமா? விதியின் குற்றமா ?