என் நினைவெல்லாம் நீயே வாழ்கிறாய் 555
என்னுயிரே...
கல்லூரி சென்றேன்
பட்டம் வாங்கினேன்...
வேலையின்றி சுற்றிவந்தேன்
தண்டசோறு என்கிறார்கள் வீட்டில்...
வேலையில்லாத வெட்டிப்பையன்
என்கிறார்கள் ஊரில்...
வெட்டியாக இருந்த என்னை
உன் சுட்டுவிழி பார்வையால்...
என்னையும் வேலை செய்ய
வைத்துவிட்டாயடி நீ...
உன்னை மட்டும் சுற்ற
வைத்தாயடி என்னை நீ...
உன்னிடம் என்
காதலை சொன்னால்...
நீ ஏற்பாயோ மாட்டாயோ
சந்தேகத்தில் வாழ்கிறேனடி...
உன்னை நினைக்காமல்
இருக்கவும் முடியவில்லை...
உன்னை இறுக்கமாக
அணைக்கவும் முடியவில்லை...
நான் திரும்பும் திசையெங்கும்
நீயே தெரிகிறாய்...
என் நினைவெல்லாம்
நீயே வாழ்கிறாய்...
நானும் வாழவேண்டும்
உன்னோடு...
இல்லை கலக்க வேண்டும்
இந்த மண்ணோடு...
சொல்லிவிடடி உன் சுட்டுவிழி
பார்வையில் ஒரு பதில்.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
