என் காதல் பயணம் திருச்சி பிரவீன்

என்னோட காதல் கதை கற்பனை இல்லை நிஜ கதை
.
ஒரு அழகான ஊரில்
சுற்றி திரியும் பட்டாம்பூச்சிகள் போல்
இரண்டு இதயங்கள் காதலில் வசப்படும் காலத்தை இந்த கதையில் கூறுகிறேன்
.
திருச்சி மாவட்டத்தில் துறையூர் என்ற ஒரு ஊர் அதில்
பிரவீன் என்ற ஒருவன் வசித்து வந்தான்
அவன்
அதே ஊரில் வசிக்கும் ஒரு பெண்ணின் மீது அளவுகடந்த காதலை வைத்து இருந்தான்
அந்த காதல்
மலர்களை விட மென்மையானது
பணியை விட குளிர்ச்சியானது
அவன் வாழ்வது அவளுக்காக தான் என்று
அவன் காதல் புரிய வைக்கும் அவளுக்கு என்று..
.
இவன் தினமும் பல கனவுகள்
பல நினைவுகள்
பிரிவுகள் வலி கண்ணின் ஓரத்தில் நீர் துளியாக
வழியும் பொழுது கூட
அவளின் நினைவு இவனுக்கு மருந்தாக அமைந்தது
.
இவன் இப்படி அவளை வெறித்தனமா காதல் செய்தும்
அவள் இவனை பார்க்க கூடாது என்று வெறுத்து
அவனை கண்டுகொள்ளாமல் இருப்பாள்
.
இவன் மனதில் தோன்றும்
சில கவிதைகள் அவளுக்காகவே படைத்து வைத்து இருந்தான் அதில் சில
.
சக்கரையை கரும்பில் இருந்து எடுக்கலாம் என்று சொல்வார்கள்
ஆனால் நான் அவள் புன்னகை பார்த்த பின்பு
சக்கரை அவள் தேன் சிந்தும் இதழ்களிலும் இருந்து எடுக்கலாம் என்றும் அறிந்து கொண்டேன்
.
2.
இரவின் முடிவில் விடியல் உண்டு
அலைகள் முடிவு கரையில் உண்டு
என் காதல் தொடக்கமும்
அவளில் தான் உண்டு
என் காதலின் முடிவும்
அவளில் அதான் உண்டு
.
3.
சிரிப்பு கூட சித்ரவதை அவள் என் கூட இல்லாத பொழுது
சித்ரவதை கூட இனிப்பு அலை அவள் என் கூட இருக்கும் பொழுது...
.
4.
மரணம் கூட ஒரு நாள் என்னை கொள்ளும்
அனால் உன் மௌனம்
என்னை ஒவ்வொரு நாளும் கொள்ளும்
..
5.
தேடி கிடைக்காத உன்னை
தேடி தேடி அலைந்தேன் என்று நான் சலித்து கொள்ள வில்லை
தேடி கிடைத்த பின்பும்
என்னை தெரியாது என்று நீ சொன்னதை தான் நான்
வலியோடு வதங்குகிறேன்
.
6.
அழகு என்றால் எல்லாருக்கும் வானம் பூமி மலர் வானவில்
நியாபகம் வரும்
அனால் எனக்கு உன்னை தான் நியாபகம் வரும்
நீ ஏழு அதிசயத்தில் முதல் அதிசயம் என்று
நான் அறிந்ததால்
.
7.
எத்தனையோ சோகங்கள் எனக்கு இருந்தாலும்
அத்தனையும் உன் பின்னால் அலைந்து நான் வந்தால்
என்னுள் இருந்த சோகம்
எல்லாம் கரைந்து விடும்
.
8.
நான் உன்னை பார்க்க ஊருக்கு வரும் நாள்
அந்த நாளில் தான் எனக்கு திருநாள்
யாரும் இறந்து விட்டார்கள் என்று தான் வீட்டில் இருந்து எல்லோரும் வருவோம்
இல்லை என்றால் ஏதும் விஷேசம் இருக்கும்.
நான் வருவதோ உன்னை பார்க்க தான் எனக்கு உன்னை பார்ப்பது தானே விஷேசம்.
.
9.
எல்லாரும் போகும் பாதை கூட நீ போனால் மட்டும் தான்
எனக்கும் பாதையாக தோன்றும்
அதில் போகும் பொழுது தான் எனக்கு போதை ஒன்று தோன்றும்
அந்த போதைக்கு நான் அடிமை
.
10.
ஒரு வார்த்தை உயிர் காக்கும் என்றால் அது கடவுள் என்று சொல்வார்கள் எல்லாரும்
அனால் என்னை காக்கும் ஒரு வார்த்தை உன் வார்த்தை என்றால் உன்னை என்ன சொல்வது.
.
11..
பூவிடம் வாசம் வாங்கி நீ வந்தாயோ நீ பார்த்தாலே
வீசுது வாசம் என்னுள்ளே
..
12
..
உன்னால் கிறுக்கான என்னை
எல்லாரும் ஒரு மாதரி பாக்கிறார்கள்
நீ என்னை ஒரு முறை கூட பார்க்காததால்
..
13
.
கருப்பு வெள்ளை பச்சை நீளம்
இவை எல்லாம்
பூக்களுக்கு வானவில்லுக்கு இன்னும் சில பொருள்களுக்கு சொந்தக்காரர்கள்
அனால் இவை அனைத்தும் உனக்கு சொந்தமானவை
நீ எனக்கு சொந்தமாவாய் என்று நான் நினைத்து காதல் செய்தேன்
நீ யாருக்கோ சொந்தம் ஆவாய் என்று தெரிந்து இருந்தால்
ஆண்ட்ரே சென்று இருப்பேன் வீட்டிற்கு இல்லை
சுடுகாட்டிற்கு
.
14
.
இனியும் ஜென்மம் வேண்டாம்
மீண்டும் உன்னை காதல்
செய்து என்னை நானே காயம் செய்து
பூவாக உன்னை நினைத்து
வாடினேன் நான் காதலால் உதிர்ந்து

..15
.
புரிந்து கொள்வாய் என் காதலை
புரியாமல் கொள்ளும் இந்த நேரத்தை
நீ புரிந்து கொள்ளும் பொழுது
நெருப்பின்றி எரிந்து விடுவாய்
உறக்கம் இன்றி தவித்திடுவாய்
காணவேண்டி தவம் இருப்பாய்
கண்ணீர் இன்றி கதறிவிடுவாய்
..
16.

நான் செய்த காதல்
உன்னோடு சந்தோசமாக வாழ
தான் என்று புரிந்து கொள்வாய்
அன்று உன் வாழ்க்கை
சந்தோஷம் இன்றி மாறும்
அவ்வாறு ஆகி விடுவதை
நான் தாங்கி விட மாட்டேன்
அதனால் நான் தூங்கி விடுகிறேன்
விடியும் வரை இல்லை
மீண்டும் உனக்காக பிறக்கும் வரை
.

17.

என் காதலை இந்த ஜென்மத்தில்
உனக்கு புரிய வைக்க முடியவில்லை
எத்தை ஜென்மம் ஆனாலும்
என் காதல் உனக்கு புரிய வைக்காமல்
நான் ஓய போவதும் இல்லை மாரு ஜென்மம் வேண்டும் கண்டிப்பாக நீயும்
.
18
.உன் உள்ளம் தான் என் சொர்கம்
அதில் வாழ தான் நான் காதல் என்ற யுத்தம் செய்வேன் என்றும்
.
கடைசி வரை இவன் ஒரு தலை காதல்
அவள் அறிய வில்லை
.
இவன் மூச்சி உள்ளவரை இவன் மனம் அவளை விட்டு மாறவில்லை
.
இவன் இறக்கும் நேரத்தில் கூட அவன் உள்ளத்தில் இருக்கும்
அவள் நினைவு இறக்கவில்லை.
..
தொரரும் அடுத்த ஜென்மத்திலும்

எழுதியவர் : த்ரிச்ய பிரவீன் lyrics (15-Dec-16, 6:42 am)
பார்வை : 382

மேலே