ஒரு விகற்ப நேரிசை வெண்பா குத்தம்நான் செய்தபோது கத்திக்கண் காட்டினாய்

ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..

குத்தம்நான் செய்தபோது கத்திக்கண் காட்டினாய்
பத்தினியாய் பக்கத்தில் வந்துநீ முத்தமிட்டு
தித்திக்கப் பேசியெனை பித்தனாக மாற்றினாய்
அத்தனைக்கும் மொத்தமாய்நன் றி

அத்துமீற போதையில் சத்துணவு தந்தெனக்கு
கத்திபோல் கண்ணழகில் குத்தியெனை நித்தமும்
பித்தனாகி சுற்றவுனை வித்தகனாய் மாற்றினாய்
அத்தனைக்கும் மொத்தமாய்நன் றி

14-12-2016

எழுதியவர் : (15-Dec-16, 10:36 am)
பார்வை : 95

மேலே