மலரும் நினைவுகள்
அப்பாவின் விரல் பிடித்து
அ,ஆ...எழுதியது...
அம்மாவின் குரலில்
ஆத்திச் சூடி கற்றது...
ஆயாவின் மடியோரம்
அழகிய கதைகள் கேட்டது...
தாத்தாவின் தாடியில்
சடை பின்னி பின்னலிட்டது...
ஆத்தங்கரை குயிலிடம்
கூட சேர்ந்து கூவியது...
ஆலமர விழுதில்
அந்தி சாயும்வரை ஆடியது...
வெண்ணிலவின் வெளிச்சத்தில்
வீட்டுப்பாடம் எழுதியது...
பின்னிரவு கனவு ஒன்றில்
சித்தம் கலங்கி அமர்ந்தது...
மலரும் நினைவுகளாக மனசுக்குள்...