நீ ஜெயிக்க

அனுபவம் தரும் வலியினை
சுகமென உணர்ந்திடு ஒருமுறை
பிறகென்ன கவலை வாழ்வினில்
சிறகை விரித்து பறந்திட

கண்களால் சிந்திடும் வியர்வை
இனி சிந்திட நமக்கு பயமில்லை
உடலால் சிந்திடும் வியர்வைக்கு
அதிக இடம் தந்திட துணிந்துவிட்டால்

ஏற்றமும் இறக்கமும் தான் வாழ்க்கை
என்று மூலையில் நீ முடங்காமல்
ஏர்பிடிக்கும் உழவன் போல்
எங்கும் எதிலும் முயன்றிடு
தோல்வி என்பதே உனக்கில்லை

எழுதியவர் : ருத்ரன் (14-Dec-16, 9:15 pm)
Tanglish : nee JEYIKKA
பார்வை : 263

மேலே