போற போ
ஏண்டா அந்த குடிகாரனப் பாத்து ' போற ....போ"-ன்னு சொன்ன?
@@@@@
அவன் எனக்கு தெரிஞ்சவந்தாண்டா. கெடைக்கிற வருமானத்தையெல்லாம் டாஸ்மாக்கில கொட்டறாண்டா. நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்தண்டா. " டேய் எமதர்மராசன் உன்ன அழச்சிட்டு போறதுக்குத் தயாரா இருக்கறாண்டா'-ன்னு பல தடவ எச்சரிக்கை குடுத்தண்டா. அதுக்கு அவஞ் சொன்னான்: " எமதர்மராசன் என்னத் தேடிட்டு வந்திருக்கானா? போ... போ.... சீக்கிரம் அவன அழச்சிட்டு வா. என்னத் தேடிட்டு வந்த விருந்தாளியை நல்லா உபசரித்து அனுப்பி வைக்கிறதுதான் நம்ம பண்பாடு. அவனக் கூட்டிவிட்டு வா. ஒரு லிட்டர் டாஸ்மாக் சரக்கை அவுனுக்கு ஊத்திவிட்டு தொட்டுக்க கால் கிலோ கோழி வறுவல் வாங்கி சாப்பட வச்சு சந்தோசமா வழியனுப்பி வைக்கலாம் அந்த எமதர்மராசனை".
அங்க பாரு அவன. வீட்டுக்குப் போனா போண்டாட்டி சத்தம் போட்டு ஊரக்கூட்டி அவுங்க முன்னாடியே மொத்து மோத்துன்னு மொத்துவான்னு பயந்து குடிச்சிட்டு நாயுகூடப் படுத்துத் தூங்கறான்.
அவன திருத்த முடியாதுன்னு சொல்லித்தான் அவனப் பாக்கறபோதெல்லாம் போற போ"-ன்னு சொல்லறண்டா.
@@@@
"போற போ'-ன்னா?
@@@@@
"குடிச்சுக் குடிச்சே நீ எமலோகம் போகப் போற"-ன்னு அர்த்தம்டா