மரமாகிறேன் நான் அவள் மனம் தொடவே

எலும்பு கூடுகளாய் இலைகளை உதிர்த்து
எத்தனை பாவம் அத்தனை மரங்களும்
சாலையில் சென்றவள் சற்றே நின்றனள்
சாரல் வரும் நாளும் வரும்
சாமரம் வீசிடவும் இலைகள் வரும்
தாகம் தீர்க்க மேகம் வரும்
சஞ்சலம் கொள்ள வேண்டாம் என்றே
அம்மர அருகிற் சென்று
ஆறுதல் சொல்லுகின்றாள்
ஆனால்
இலையில்லா மரங்களோ
மொழியில்லாமல் புலம்பியது
இலையில்லா என் கிளையால்
அவள் இதயம் தொட முடியவில்லை
காற்றாக நான் சென்று
என் காதல் சொல்ல முடியவில்லை
என்றே புலம்பியது ஏக்கத்தில் தவித்தது
மரங் கொண்ட காதல் கண்டு
மனம் கலங்கி அவள் சென்றாள்
மங்கை அவள் மனம் தொடவே
மரமாய் நானான கதை தெரியாமல்..

எழுதியவர் : மணி அமரன் (17-Dec-16, 9:29 pm)
பார்வை : 285

மேலே