உன் கண்ணீர்துளியில் என் உருவமடி 555

ப்ரியமானவளே...

நீயும் நானும் விழிகளோடு
சேர்ந்திருக்கும்...

இமைகளைப்போல்
சேர்ந்தே இருந்தோம்...

விதி நம்மை பிரித்ததா
சாதி நம்மை பிரித்ததா...?

ஏனோ கல்லூரியின்
இறுதிநாள் முன்னரே...

நீ என் கண்களைவிட்டு
தூரம் சென்றாய்...

அன்று நீ சிந்திய ஒவ்வொரு
துளியிலும் என் உருவந்தானடி...

கலங்காதே என்னுயிரே...

இரத்த உறவு இல்லாத
காதலின் பிரிவு கொடியதுதான்...

என்றேனும் நீயும் நானும்
சந்திக்க நேர்ந்தால்...

அன்று உன் விழிகளும் என் விழிகளும்
நலம் விசாரித்துக்கொள்ளுமே...

அது போதுமடி
இந்த ஜென்மத்திற்கு...

மறுஜென்மம் இருந்தால்
பிறப்போமடி நீயும் நானும்...

அன்று சேர்வோம் கணவன்
மனைவியெனும் காதல் கிளிகளாக...

என் ப்ரியமானவளே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-Dec-16, 8:07 pm)
பார்வை : 728

மேலே