நிலையாமையே வாழ்வு -- கட்டளைக் கலித்துறை

எண்ணிலா மாந்த ரெடுக்கும் பிறப்பினி லேற்றமிலை .
மண்ணினில் தோன்றும் மழலையர் யாக்கையும் மாண்டிடுமே .
வண்ணமாய் நிற்கும் வயதினில் மூத்தவர் வாழ்வதில்லை .
திண்ணமாய்ச் சொல்வேன் திடமுடன் நீக்குக தீவினையே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Dec-16, 3:02 pm)
பார்வை : 62

மேலே