நிலவும் நானும்

நிலவும் நானும்....

விண்மீன்கள் நடுவில் வெள்ளி நிலவாய் அவள் முகம்
இருளையும் ஒளிர்ந்திட செய்கிறது உதட்டோரத்தின் சிறு புன்னகை....

இதழ் நடுவில் மச்சம் கவர்ந்திழுக்கிறது அவள் பக்கம்....
வில் போன்ற இமைகள் வசியம் செய்கிறது
என் மனதை...

ஆடுகிறாள் ஊஞ்சல் இணைந்தாடுகிறது என் உள்ளம்...
அவள் பார்க்கும் பார்வைகளில் பறிபோனது என் நெஞ்சம்...

கை வளையல்கள் கைபிடித்துச் செல்ல அழைக்கின்றது...
காதோரம் ஆடும் அவள் காதணிகள் இதயம் களவாடிச் செல்ல தூது விடுகின்றது....

என் உறக்கம் தொலைத்து அவள் வருகைக்காய் தவமிருக்கிறேன்...
என் கனவுகளை திருடியவள் நிலவாய் தரிசனம் தருகிறாள்....
என் மனதினை விழியினால் படம்பிடித்துச் செல்கிறாள்....

விடியல் மறந்து என் நிலவோடு நானும் கதை பேசுகிறேன்....
புரியாத மொழியினை பதிலாய் தந்து புதிரோடு விடைபெற்றுச்செல்கிறாள்
அவளும்....

எழுதியவர் : அன்புடன் சகி (19-Dec-16, 3:09 pm)
Tanglish : nilavum naanum
பார்வை : 512

மேலே