என் காதல்

உன்னை பார்த்த நாள் முதலாய்
என் ஜீவன் என்னிடம் இல்லை.

உன்னை மீண்டும் பார்க்கும்
ஆசையில் தேடினேன் - சோர்ந்தது
கால்கள் மட்டும் தானடி,

மனம் உற்சாகமாக காத்திருந்தது
உன்னை காணும் நாளை எதிர்நோக்கி,

விழியில் ஆனந்தமாய் வடிந்தது நீர்
உன்னை காண கிடந்த தவம் முழுமையடைந்ததால்....

ஆவலாய் உன் அருகே வந்து - என்
நெஞ்சில் நான் எழுப்பிய கோட்டையின்
தேவதை நீ என்று உரைத்த போது
மௌனம் மட்டும் பதிலாய் தந்து போனாயடி,

நான் கொண்ட மொழி தமிழ்,
நீ கொண்ட மொழி மௌனம் என்று
அறிந்த பின் தான் - தீர்க்கமாய்
முடிவு செய்தேன்,

பெண்ணே இன்று மட்டும் அல்ல
என்றுமே என் வாழ்வின்
பாதி நீ என்றில்லாமல்

என்னில் பாதி நீயாக வாழ்வான் - என் காதல்
முழுமை பெற உன் மனதை தருவாயா?

எழுதியவர் : MeenakshiKannan (6-Jul-11, 7:42 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 463

மேலே