துடிதுடிக்கும் என் இதயத்தின் வலி 555
![](https://eluthu.com/images/loading.gif)
என்னுயிரே...
மின்சாரம் தடைபடும்
நேரமெல்லாம்...
நீ மெழுகுவர்த்தி
வெளிச்சத்தில் இருக்கிறாய்...
நானும் மெழுகும்
ஒன்றுதாண்டி...
உன்னை நினைத்து நான் உருகுவது
உனக்கு தெரியாது...
வெளிச்சத்தை ரசிக்கும் நீ
உருகும் மெழுகை சற்று பாரடி...
என் உள்ளம் உருகுவது
உனக்கு தெரியும்...
ஒவ்வொரு இரவும் உறங்காமல்
விழித்திருக்கும்...
என் விழிகளுக்கு தெரியுமடி
துடிதுடிக்கும் என் இதயத்தின் வலி.....