புதைந்தது புரட்சி

அரியணையாம்!
ஆணவமாம்!!
அகங்காரமாம்!
ஆதிக்கமாம்!!

பழித்துரைத்த மக்களின்
எழுத்துப்பிழைகள் இதோ...

அன்பெனும் அரியணையின்
அன்னையெனும் ஆவணம் சூட்டி
அரசி-இயல் அங்கீகாரம் கொண்டும்
அகங்காரம் அழித்த அம்மையே...!
நீயே ஆதி! நீயே கமலம்!!

பொலிவிழந்தது போயஸ் கார்டன்!
இரக்கம்கொண்ட இன்னுயிர்
உறக்கம் கொண்டதனால்...!

ஒளி இழந்த
ஓலம் பெருகியது - உன்
ஓங்கிநின்ற போர்க்குரல்
மௌனம் பெற்றதனால்...!

நீ எழுந்து நிற்க
எதிர்த்து நின்ற கூட்டம்
நின் மரணமறிந்து
மண்டியிட்டது -
மன்னிப்பு கேட்க...

கன்னடம் தந்த
தமிழச்சியே...! - உன்
பொன்னுடல் சுமக்க
எம்மண்ணிற்கு
பெருமை சேர்த்தாய்...

தாய் தமிழ்நாடெனும்
பெயருக்கு சான்றாய்
விதைந்து விட்டாய்...

இனி ஜனிக்கும்
ஒவ்வொரு உயிரும்
உன் வருகைகாய் அழும்
முதல் வார்த்தை...

அம்மா!!!

எழுதியவர் : மணிகண்டன் (21-Dec-16, 11:01 am)
பார்வை : 118

மேலே