முழுமதியானவளே
![](https://eluthu.com/images/loading.gif)
என் இனிய அம்மாவிற்கு...
என் சோம்பல்கள் சில நேரம்
உன்னை சரிய வைத்திருக்கலாம்...!!
என் வேகங்களால் தகாத தவறிழைத்திருக்கலாம்...!!
என் கோபங்கள் உனை சற்றே
சிராய்த்திருக்கலாம்...!!
உன் ஆசைகள் பல என்னால் அடிப்பட்டிருக்கலாம்...!!
உன் கனவுகளை என் விழியில் நீ காண நினைக்கலாம்...!
உன் ஏமாற்ற பாதைகளை எனில் மாற்ற நினைக்கலாம்...!!
இப்படி உன் கனவுகள் எத்துனைதான் கனவாகிப்போனதோ....!!
நீ கண்ட முற்கள் நீக்கி
என் வழி விளக்கிய தாயே...!!
நான் உண்ட மிச்சம் உண்டு
உயிர் வளர்த்திடுவாயே....!!
உனை எதிர்த்து நான் பேசையிலே
எத்துனை சில்லானாயோ...!!?
உன் கண்ணாடி மனதினையே
உடைத்தே தான் போனேனோ...!!
எனை உன்னில் கருவேற்றி
உன் உதிரம் எனக்கேற்றி
உன் ஒட்டுமொத்த வாழ்வையுமே
உன் பிள்ளைகட்காய் என்பாயே..!!
இப்பிறை ஈன்ற முழுமதியானவளே...உன் மகளின் பிழைகளையாயோ....???!!
என் உயிரின் ஓர் பாதியானவளே...எனக்கோர்
வரம் ஈவாயோ...??!!
நான் மரணித்த பின்
என் மறுபிறவி மடி உனக்காகத்தானென்று..!!!
தாயே...
நீ வாழ்க நலமாக...
என் மடியில் சேயாக...!!!
##சிவனிறைச்செல்வி