என்னூடே கலந்திடுவாய்

அல்லிவிழி வழியேதீட்டிய அஞ்சனமாய் எழுசென்மம்
உன்னுடனே கலந்திருப்பேனென்றேனே - கலைந்திடுமே என்றாயே!
உந்தன் கண்களொடு கலந்திடுவேன் கருவிழியாய்
என்றென்றும் என்றேனே - கலங்கிடுமே என்றாயே!
என்செய்தால் என்னைநீ அடைவாயோ அனுதினமும்
அயலாது வினவினேனே - மௌனம்தான் காத்தாயோ!
உன்செய்கை புரியாமல் பித்தனைப்போல் பிதற்றுகிறேன்
என்செய்ய இனிநானும் - என்னூடே கலந்திடுவாய்!
- ரசீன் இக்பால்