இனிதாய் ஒரு பயணம்
"" இனிதாய் ஒரு பயணம்""
உன் முரட்டுச் சீண்டலுக்குள் உள்ள மென்மையான காதல் பிடிச்சிருக்கு...
வீராவேசமாய் பேசும் உன் கோபத்தில் உள்ள நியாயம் பிடிச்சிருக்கு.
தத்தளிக்கும் படகையும் தனியாளாகச் சமாளிக்க போராடும் உன் மனோதிடம் பிடிச்சிருக்கு.
சிக்கல்கள் பல வரிசைப் பிடித்து நின்றாலும்,
சில நொடிகளில் கடந்து போகும் உன் விவேகம் பிடிச்சிருக்கு..
விக்கித்து நான் நின்றாலும், விரல் நுனியில் என் துயர் களையும் உன் புரிதல் எனக்கு பிடிச்சிருக்கு...
அழிச்சாட்டியம் பண்ணி அடம் பிடிக்கும் என்னை, அதட்டியபடியே அரவணைக்கும் உன் கரிசனம் எனக்கு பிடிச்சிருக்கு...
மூன்று முடிச்சு போட்டதால் இணைந்த உறவாக இருந்தாலும்,
ஏழ்பிறப்பு பந்தத்தை என்னுள் விதைத்த உன் காதல் எனக்கு பிடிச்சிருக்கு..
நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை, என்ற பேருண்மையை நாம் உணரச் செய்த இந்த இனிய இல்லறம் எனக்கு பிடிச்சிருக்கு..
ஆக்கம்: பெ.மகேஸ்வரி