வெண்ணிலவே விளையாட வா

பால் வடியும் புது மலரே...
தேன் வழியும் வான் நிலவே...
மஞ்சள் பூசிய அழகு சுந்தரியே...
கொஞ்சி சிரிக்கும் காய்க்காத முந்திரியே......


அலையாய் மிதந்து நீ நடந்திட
சாலை மரங்கள் பூமழைத் தூவுதே...
சிலையில் காணாத உந்தன் வனப்பில்
மலைத்து என்மனம் மானென தாவுதே......


வாள் வீசும் இரு விழிகள்...
வாய் பேசும் கனி மொழிகள்...
என் நெஞ்சில் மெல்ல நுழைந்து
சத்தம் இல்லாது யுத்தங்கள் நடத்துதே......


வெள்ளிக் கொலுசின் முத்து மணிகளாய்
என்னிரு கண்மணிகளை நீ கோர்த்திடு...
இரவின் மடியில் இமைகளால் உனக்கு
கவரிகள் வீசி இன்னிசையில் தாலாட்டுவேன்......


அஞ்சனம் தீட்டிய அஞ்சுகம் நீயே...
நெஞ்சத்தில் மஞ்சமாய் விரிந்தவளும் நீயே...
இளமையின் கனவுகளுக்கு உருவம் கொடுத்தாயே...
இதயம் பறித்தும் இன்னுயிர்த் தந்தாயே......

எழுதியவர் : இதயம் விஜய் (24-Dec-16, 8:17 am)
பார்வை : 215

மேலே