எரிதழல் கொண்டு வா

வெண்பாக்கள் :



கல்நெஞ்சம் கொண்டலையும் காமப் பருந்துகள்
முல்லை மலர்களின் சூலறுத்து வாழ்வோர்கள்
சொல்லாலே பெண்மனம்வ தைப்போர்கள் யாவரையும்
கொல்லும் நெருப்பினில் தள்......

அகத்தின் அழகினைக் காணாது மங்கை
முகத்தின் அழகில் மயங்கி - நகமாய்
மனதிலாசை நோய்வளர்த்து கேடுகள்செய் வோரை
அனலில் புழுவெனப்போ டு......

சிரித்து மலர்ந்திடும் பூமுகமே கண்ணில்
எரிதழல் வைத்திரு என்றும் - நரிகளின்
காமத்தால் மென்னுடலின் ஊன்தின்ற நேர்ந்திட்டால்
பூமகளே சுட்டே எரி......

கண்களால் உன்றன் அழகினைப் பருகிடும்
ஆண்களின் பொல்லாதப் பார்வைக்கும் _ பெண்மையின்
உரிமைகள் தந்திடாது ஏமாற்றும் கைகளுக்கும்
எரிதழல் மூட்டி விடு......

எழுதியவர் : இதயம் விஜய் (24-Dec-16, 9:01 am)
பார்வை : 869

மேலே