கானல் நீர் உலகு
கானல் நீர் உலகில். ..
காதலெலும் வேரை...
கண்டெடுக்க போனேன், நானும்...
கல் பட்ட இடத்தில் நானோ....
கண்ணாடி ஆகி போனேன்...
கசந்து போன, நினைவால் நானே...
கண் காணா , தூரம் போனேன்....
கண்டெடுக்க ஆட்கள், தேட....
காகிதத்தில் எழுத்தாய் ஆனேன்...
கானல் நீர் உலகில். .
கவலை தான் நிலமோ.?
கண்ணீர் தான் உரமோ..?