என் உலகம்

எனக்கு கிடைத்த
பிடுங்கள் இல்லா
சொற்ப நேரம்.

சின்ன சின்ன
அசைவுகள் ஈர்க்க

கைகள் எதையாவதை
பற்றிக் கொள்ள
நினைத்து

ஏதும் இன்றி
வெறும் கைய்யை
மூடிக்கொள்ள

கால்கள் எழுந்து
நடக்கத் துடித்து

கவனித்தல் என்பது
கற்றலின் தொடர்
நிகழ்வாய்

கை கால்கள் உதைத்து
காலமதை உந்தி தள்ள

உதடோர புண்ணகை
பார்த்து என்
சுற்றம் பூரிக்க

என்ன என்று
யாருக்கும் புரியாத
புதுபுது சத்தங்கள்

என் முயற்சியில்
வார்த்தைகளாய் உதிர

உறக்கத்தில் பிறக்கும்
சிரிப்பிற்கு அர்த்தம்
தேவ ரகசியமாய்

ஏன் என்று யாருக்கும்
தெரியாத அந்த

கனவு கலைந்தப்
பின்னே அதை,

எனக்கும் சொல்லத்
தெரியாமல் நானும்
முழிக்க..,

என் உலகம்!
தனி உலகம்!

பிடுங்கள் இல்லா
சொற்ப நேரம்.
#sof_sekar

எழுதியவர் : #sof #sekar (26-Dec-16, 12:05 pm)
Tanglish : en ulakam
பார்வை : 92

மேலே