காதலை தேடி-34

காதலை(லே) தேடி -34

உடலை தாண்டிய
உறவாய் நம் காதல் சிசு
உறக்கம் கொண்டு
உலகை மறந்து
மயங்கி இருக்க இதை
பிரிவென நினைக்கலாகாது
என் கண்மணியே...

நீயும் நானும்
நாமாய் வாழ்கிறோம்
நம் காதல் சிசுவோடு ......

சிறிது காலம் காத்திரு
உன்னை சேரவே
இந்த காதல் பயணம்
வெகு விரைவில் உன்
கரம் புகுவேன் உன் காதலனாய்
என் காதல் சகியே!!!!

"சார், நீங்க எங்க வீட்டுக்கு வரது உறுதி தானே சார், கண்டிப்பா வருவீங்க தானே"

"இதே கேள்வியை எத்தனை தடவ போன் போட்டு கேட்பப்பா? இன்னும் ரெண்டு தடவ கேட்டா செஞ்சுரி தொட்டுடும்"

"அதுக்கில்லை சார் , நீங்க வர்றதா எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன்...அதான் எதுக்கும் கன்பார்ம் பண்ணிக்கலாம்னு, வந்துருவிங்க தானே சார்"

"கற்பூரம் அடிச்சி சத்தியம் செய்யட்டுமாப்பா, இப்போ மணி என்ன ஆகுது தெரியுமா, 3 மணி....இன்னும் கொஞ்ச நேரத்துல முழுசா விடிஞ்சிரும்...நைட் புல்லா இப்படி கேள்வி கேட்டா நான் எப்போ தூங்கி எப்போ எழுந்து அங்க வரது....இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு, தூங்கிக்கிறேன்பா, அப்போ தான் கொஞ்சமாவது டயர்ட்னெஸ் இல்லாம இருக்கும்...பெர்மிஷன் கொடுப்பாயா"

"சாரி சார், எதோ ஆர்வ கோளாறுல பண்ணிட்டேன், நீங்க நிம்மதியா தூங்குங்க சார், நான் காலைல 7 மணிக்கெல்லாம் கிளம்பி வந்துர்றேன், ரெடியா இருங்க"

"போன் வச்சிட்டானா, இந்த பையன என்ன பண்றது, இப்போவே மணி 3 ஆச்சு, இதுல 7 மணிக்கு எங்க ரெடியா இருக்க, இவன் அன்பு தொல்லைக்கு அளவில்லாம போச்சு"

என்ன தான் வெளிப்படையாக சலித்து கொண்டாலும் என் உள் மனதில் ஒரு நிம்மதி வெளிபடுவதை தவிர்க்க முடியவில்லை....என் சகி என்னோடு உறவாடும் கள்ளமில்லா அன்பை சாயலில் கொண்டது போல இவனின் உறவும் அன்பும் என்னை என்னவோ செய்கிறது....

சகி, அவளை எந்த நிமிடத்திலும் மறக்க முடியவில்லை, யாரை பார்த்தாலும் எந்த நிகழ்வை பார்த்தாலும் சகியை நினைத்து கொள்வதை மாற்றி கொள்ளவே இயலவில்லை.....

அவளை காணாது திரும்ப போகிறேன் என்னும் நினைப்பே வலிக்கிறதே, நிஜத்தில் இதை எப்படி என் மனம் தாங்குமோ, இறைவா நீயே எனக்கு துணை, வேறு வழியில்லை...

"கண்மணி தூங்கையிலே கண்ணிமைக்க மறந்தே நான்
பார்த்து ரசிப்பேன் ........
கண்ணுறங்கு என் கண்ணே தாலேலோ"

என் சகியை நினைத்து நான் கேட்டு ரசிக்கும் பாடல் வரிகள் யாரோ என்னை போனில் தொடர்பு கொள்வதை நினைவுபடுத்த களைப்பை தள்ளி வைத்து தூக்கத்தில் இருந்து எழுந்தேன்....

"சார், கிளம்பிட்டீங்களா, நான் ஹோட்டல் வாசல்ல தான் இருக்கேன் சார், நீங்க ரெடி ஆகி காருக்கு வந்துறீங்களா?"

"மணி அதுக்குள்ளே 7 ஆச்சாப்பா, அவ்ளோ அசந்து தூங்கிட்டேனா?"

"இல்ல சார், மணி இப்ப 6 .30 தான் ஆகுது, நீங்க ரெடி ஆக அரை மணி நேரம் ஆகும்ல, அதான் இப்போவே வந்துட்டேன்"

"உன்னோட கடமை உணர்ச்சிக்கு அளவில்லையா"

"என்ன சார் சொன்னிங்க, எனக்கு சரியா கேட்கல"

"அது ஒண்ணுமில்லப்பா, பொறுப்பா நடந்துக்கிறனு பாராட்டினேன்"

"புகழாதிங்க சார், என் கடமையை செய்றேன், சரிங்க சார், பேசி நேரம் வீணடிக்க வேண்டாம், சீக்கிரம் கிளம்பி வாங்க சார், நான் கீழயே வெயிட் பண்றேன்"

"நல்ல பையன், எப்படியோ இந்த நாளோட என் பயணம் முடிவடைய போகுது, எல்லா இடங்களையும் ஒருமுறை சுத்தி பார்த்துட்டு ஏர்போர்ட்டுக்கு போக நேரம் சரியாய் இருக்கும், அடுத்த அழைப்பு வரதுக்குள்ள கிளம்பி போக வேண்டியது தான்"
"சார், வாங்க சார், உங்களுக்காக தான் இவ்ளோ நேரம் காத்துகிட்டு இருக்கேன், இப்போ கூட திரும்ப ஒருமுறை போன் செய்யலாம்னு நினச்சேன், உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்னு விட்டுட்டேன், அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க"

"நேத்து நைட் இருந்து கால் பண்ணதெல்லாம் எந்த கணக்குல சேரும் தம்பி"

"அது, அது வந்து சார், ஓவர் எமோஷனல் ஆகிட்டேன், அதான் சார், நீங்க வாங்க சார், நாம கிளம்பலாம்"

"சரிப்பா, வண்டிய எடு"
சகியை பிரிந்து போன நாள் என் மனம் என்னோடு இல்லை, அவளை ஒருமுறை பார்க்க மட்டுமே இன்றும் நான் உயிரோடு உலவி கொண்டிருக்கிறேன், ஆனால்
அதற்கும் வழியில்லாமல் திரும்ப செல்ல வேண்டிய சூழ்நிலை...இன்னும் எத்தனை நாட்கள் எனக்கு இந்த ஆயுள் தண்டனையோ....

எல்லாம் என் தவறு மட்டும் தான், என் தவறு மட்டுமே தான்....

"சார், ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே, இவ்ளோ அன்போட காதலோட மேடமை தேடி இவ்ளோ தூரம் கஷ்டப்படறீங்களே, அப்படி இருக்க நீங்க எதுக்காக அன்னைக்கு மேடம விட்டு பிரிஞ்சி வந்திங்க??"

இந்த கேள்விக்கு என்ன சொல்வேன்....

"சாரி சார், தப்பா கேட்டுட்டேன்னு நினைக்கிறேன், மன்னிச்சிடுங்க"

"இல்லப்பா, நீ சரியா தான் கேட்கற, என் முழு கதையும் உன்கிட்ட சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு, இன்னையோட நான் இங்க இருந்து போக போறேன், அப்படி இருக்கும்போது உன்கிட்டயாவது என் மனச திறந்து என் வலியை பகிர்ந்துக்கலனா அப்புறம் என் காதலுக்கு அர்த்தமே இல்லாம போய்டும், சொல்றேன்பா"

என் கடந்த கால நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் நிகழ்காலத்தில் நினைவுபடுத்த ஆரம்பித்தேன்....

எழுதியவர் : இந்திராணி (26-Dec-16, 5:48 pm)
பார்வை : 433

மேலே