நாய்களாய்
நாய்களாய் .....
வாங்கிய கடன் சுமையால்
வறண்ட வயல்களில்
வீழ்ந்து மடிகிறான்
எங்கள் விவசாயி
கல்விக் கடன் கொள்ளையால்
படிப்பதற்கு இயலாமல்
பரிதவிக்கிறான் எங்கள் மாணவன்
ஆனால்
இயற்கை வளங்களை
இருட்டிலே விற்றுவிட்டு
கோட்டு சூட்டுடன்
பகலில் வலம் வருகிறது
ஒரு பயங்கரவாதக் கூட்டம்
இவர்கள்
ஆட்சிப்பணியில் அமர்ந்த நாளாய்
சொந்தக் காசில் ஒருவேளை
சோறு கூட தின்பதில்லை
ஆலயங்களில் கூட
இவர்களுக்கான அர்ச்சனைத் தட்டை
வேறொருவன்தான் வாங்குகிறான்!
அன்றைய
ஆட்சிப் பணியாளர்கள்
அரசுப் பணியை
சேவையாய் நினைத்து
சிங்கமாய் கர்ஜித்திருக்கிறார்கள்!
இன்றைக்கு
அத்தகைய அலுவலர்கள்
மொத்தமாய் ஒதுக்கப்பட்டு
நேர்மையற்றவர்களே
எங்கும் நிறைந்திருக்கிறார்கள்!
மக்கள் வரி பணத்தில்
மகிழ்வாட்டம் போடும்
இந்தக் கயவர்கள்
அடுத்தப் பிறவியிலாவது
நாய்களாய் பிறந்து
நன்றியுடன் இருக்கட்டும்!