ஈழத்து மங்கை

பெண்ணுக்கு இருப்பிடம்
அடுப்படி என்ற காலமும்
இவளின் உறவுக்கு படுக்கையடி
இந்நிலை மாறி

பாரதி கண்ட புரட்சிப் பெண்ணாய்
மண்ணுக்காக
ஈழத்து மங்கையர்
போர்க்கோளம் பூண்டபோது ஏன்

தமிழ்நாட்டுச் சினிமாவில் மட்டும்
பெண்கள்
அரை நிர்வாணமாய்
பணத்துக்காகவா காட்சிதருகிறார்கள்.?


கல்வித்திறன் இருந்தும்
முன்னேற முடியாது
முடக்கப்பட்டார்கள் ஈழத்துமங்கையர்
தரப்படுத்தல் சட்டத்தால்.


வாழத் தொழில் இல்லை
உண்ண உணவில்லை
பேசும் சுதந்திரமில்லை
திறமையைக் காட்ட வழியில்லை

இந்நிலையில் ஈழத்து மங்கையர்
உயிரையும் துட்சமெனமதித்து
உரிமையைக் காக்க
கைகளில் துவக்கு ஏந்தும் கருமபுலி நிலை.

பாலூட்டி சீராட்டி வளர்ந்த
ஈழத்து மங்கையர்
மண்ணுக்காக தம்முயிரைத்
தியாகம் செய்யும் போது

அது ஏன் தமிழ் நாட்டில்
சில கிராமங்களில்
விதை நெல்லக் கொடுத்து
பெண்சிசுவைப் புதைகுழிக்கு அனுப்புகிறார்கள்?


********

எழுதியவர் : (பொன் குலேநதிரன் - கனடா_ (28-Dec-16, 10:32 am)
Tanglish : iilaththu mangai
பார்வை : 111

மேலே