காதல்
பிரிவு நிரந்தரமல்ல... *******************************
சாலையோர சாமியோடு உனக்கு நானும் எனக்கு நீயும் வரங்கள் வேண்டினோம்.
இன்று சாக்கு போக்கு சொல்லி தீர்த்து பிரிய நினைக்கிறாய்...
நான் சிறகு ஒடிந்து கிடந்தபோது நொடிகள் தோறும் சிரிக்க வைத்து விரல்கள் பிடித்து வீதி சுற்றினாய்... இன்று சிறகு முளைத்தும் உன் சொல்லில் சுட்டு பொசுங்கியே பறக்க மறந்து சுருண்டு கிடக்கிறேன்...
கோயில் மணி ஓசையில் உன் கோபங்கள் அத்தனையும் அறுந்த முத்துக்களாய் விழுந்து தெறிக்கட்டும்... காரமாய் பேசி காயத்தை வளர்க்காதே; உதட்டில் புன்னகையுடனும் கையில் பூக்களுடனும் வா,,,
மீண்டும் காதலிப்போம்...