காதல் எச்சரிக்கை

ஆமைபோல நகர்ந்து
ஆண்மையை தீண்டும் விழிகளின் வலைகளில்
வீழ்ந்து விடாதே சகோதரா…!

இக்கால கன்னியரின் காதல் விழி வீச்சு
அணு உலையின் கதிர்வீச்சை விட ஆபத்தானது…

பெண்ணாசையில் மண்ணுக்குள் புதைந்த
அரச மணிமகுடங்கள் ஏறாளம்…

கண்ணசைவில் காணாமல் போன
கப்பல்கள் கணக்கிலேயே இல்லை…

இதழ் சிரிப்பில் இல்லாமல் போன
இமயங்கள் கண்ட சிகரங்கள் எண்ணற்றவை…

உன் அறிவுக் களஞ்சியத்தை
வேறோடு அழித்து விடும்…

உனது முன்னேற்றப் பயணத்தை
பாதியிலேயே தளர்த்தி விடும்…

காலநேரம் பாராமல்.,
நீ உழைப்பால் வித்திட்ட
உன் ஊதியத்தை கரைத்து விடும்…

முதலில்.,
புள்ளிமானைப்போல் துள்ளி வரும்…

முடிவில்.,
புதைகுழியில் இழுத்துச்சென்று தள்ளிவிடும்…

பதறான காதலே உலகமென்று
உன் நேரத்தை வீணாக இழக்காதே…!

உன் இதயத்தில்
காதல் எனும் பெயரில் நுழைந்திருப்பது..,
பட்டாம்பூச்சி அல்ல.,
பிணம் திண்ணும் கழுகு…

முதலில்
உன் உரக்கத்தை திண்ணும்…

முடிவில்.,
உன்னையே திண்ணும்…

வாலிபத்தில் வரும் பாலியல் காதல்
உன் வாழ்வை பாழடித்து விடும்…

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (30-Dec-16, 12:14 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
Tanglish : kaadhal yacharikkai
பார்வை : 79

மேலே