உனக்கான தேடலில்

காதல் எனும் சிலுவையால்
என்னை நானே அறைகிறேன்
காலம் முழுதும் வாழ்விலே
காணாமல் போகிறேன

உனக்கான தேடலில்
நான் தொலைந்து போகின்றேன்
என்னை மீண்டும் தேடினால்
அங்கு உனை காண்கிறேன்

நீங்காத ஞாபகம்
நித்தம் என்னை கொல்லுதே
நீ வந்த கால்தடம்
நெஞ்சில் அழியவில்லையே

கண்ணீரின் வார்த்தைகள்
காயம் தரும் கண்மனி
உன் முன்னே சிரிக்கிறேன்
உனைப்பிரிந்து அழுகிறேன்
நான்கொண்ட காதலே
உண்மை காதல் என்பதால்

எழுதியவர் : வென்றான் (30-Dec-16, 1:01 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
Tanglish : unakkaana THETALIL
பார்வை : 169

மேலே